தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 februari 2018

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடவில்லை!


பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிடவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ புலம் பெயர் தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கழுத்தை அறுத்துவிடுவேன் என்பதைப் போன்ற அச்சுறுத்தல் விடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதன் காரணமாக அவரது தூதரகப் பதவியை முடிவுக்கு கொண்டு வரவும், அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ளவும் வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டிருந்தது.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டின் பேரில் குறித்த பிரிகேடியரின் பணி தொடர்வதாகவும், அவருக்கெதிரான விசாரணைகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவ்வாறான எந்தவொரு அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை என வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/173547

Geen opmerkingen:

Een reactie posten