தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 mei 2017

நடப்பது வேறு என மிரட்டல் விடுத்துள்ள பிரபாகரனைக் கண்டு ஓடி ஒளிந்தவர்கள்!

இலங்கையில் இனவாத பரப்பும் செயற்பாடுகளில் பல பௌத்த அமைப்புகள் இணைந்து செயற்படத் தொடங்கியிருந்தன. ஆனால் அரசின் நடவடிக்கை காரணமாக அவை சற்று முடக்கப்பட்டன.
எனினும் புகைவிட்டுக் கொண்டு இருந்த இனவாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் பொதுபலசேனாவினர் பொலன்னறுவை பகுதியில் சென்று செய்த அநாகரீக செயற்பாடுகள் தற்போது அதிகமாக விமர்சிக்கப்படுகின்றது.
பௌத்தத்தைக் காப்பதாகவும், அழிவடையும் பௌத்த புராதன சொத்துக்களை பாதுகாப்பதாகவும் கூறிக் கொண்டு பௌத்த அமைப்புகள் கடும்போக்கான செயற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
பொலன்னறுவையில் பௌத்த பாரம்பரியத்தை காப்பதற்காக சென்ற ஞானசார தேரர் உட்பட பல பிக்குகள் அங்குள்ளவர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர்.
தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதோடு அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ட ஒருவரை வசை மொழிகளால் திட்டியதோடு, அனைவரையும் அடித்து நொருக்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இவ்வாறான பதற்ற நிலை அங்கு ஏற்பட்டபோது அங்கிருந்த பொலிஸார் ஞானசார தேரரின் நடவடிக்கைகளை கேள்வி கேட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து “மது போத்தலுக்காக செயற்படும் எவரும், எம்மை கேள்வி கேட்க வேண்டாம், பின்னர் நடப்பது வேறு என ஞானசார தேரர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அவர்களின் இந்தச் செயற்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து பொதுபல சேனாவின் அந்த நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த காணொளியினை முன்னாள் விமானப்படை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்
இப்போது பௌத்தம் காப்பதாக சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றவர்கள் உண்மையில் பிக்குமார்களே அல்ல.
பிக்குகளுக்குரிய தகுதிகள் எதுவுமே அவர்களிடம் இல்லை. அவர்கள் கூலிப்படையினைப் போன்று செயற்படுகின்றமையை அவதானிக்க முடியுமானதாக இருக்கின்றது.
அதேபோல இன்று பௌத்தம் அழிக்கப்படுகின்றதாக கூறிக் கொண்டு பொய்யாக பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் காலத்தில் இவர்கள் எவரும் இருக்கவில்லை.
கண்டி தலதா மாளிகை உட்பட பல பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீது பிரபாகரன் தாக்குதல் மேற்கொண்டார். அப்போது இவர்கள் எங்கே சென்றார்கள்.
இன்று பௌத்தத்திற்காக பாடுபடும் இவர்கள் பிரபாகரன் இருந்தபோது ஒரு எதிர்க்கேள்வியையும் கேட்கவில்லை. பிரபாகரனுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அவரைப் பார்த்து ஒளிந்திருந்தவர்கள் இன்று வீரர்களாகி விட்டனர்.
இப்போது இந்த குடிகார கூட்டம் பொய்யாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஆயத்தமாகிக் கொண்டு வருகின்றனர் எனவும் குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/community/01/146009?ref=lankasri-home-dekstop
https://www.youtube.com/watch?v=Ct-OLgoBFe0

Geen opmerkingen:

Een reactie posten