ஜேர்மனியை சேர்ந்தவர் Tirhas (26), இவர் கடந்த ஜூலை மாதம் Bensheim நகரில் இருக்கும் அகதிகள் மையத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு வேறு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த Dawit (34) என்னும் நபரை Tirhas அவர் அறைக்கு சென்று சந்தித்துள்ளார்.
அப்போது மது அருந்தி கொண்டிருந்த Dawit , Tirhas ஐ தன்னுடன் உடறுறவு வைத்து கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு Tirhas பிடிவாதமாக மறுக்க ஆத்திரமடைந்த Dawit, மது பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்தி விடுவதாக மிரட்டியுள்ளார்.
ஆனாலும் Tirhas உடன்படாததால் அவரை அப்படியே தூக்கி அருகிலிருந்த ஜன்னல் வழியாக 15 அடி உயரத்திலிருந்து கீழே போட்டுள்ளார்.
இதில் Tirhasன் இரு கால்களும் உடைந்துள்ளது. பின்னர் 16 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற Tirhas வீடு திரும்பியுள்ளார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் Dawit பொலிசார் கைது செய்தனர்.
இதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எந்த தவறும் செய்யாமல் தான் சிறையில் இருப்பதாகவும், கடந்த 2014ல் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்ததிலிருந்தே வாழ்க்கை சரியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பாலியல் வற்புறுத்தல்கள், உடலுக்கு தீங்கு இழைத்தல் போன்ற பிரிவுகளில் Dawit மீது வழக்கு பதிவாகியுள்ள நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
http://news.lankasri.com/germany/03/124747?ref=right_featured
Geen opmerkingen:
Een reactie posten