ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன்போது வீசப்பட்ட மூன்று பெற்றோல் குண்டுகளில் ஒன்று மாத்திரமே வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலினால் பள்ளிவாசலின் கண்ணாடிகளில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அண்மைக்காலங்களில் சிறுபான்மையினத்தவர்கள் மீது இனவாதப்போக்குடையவர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துச் செல்வதுடன் பல அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இனவாதம் குறித்து ஜனாதிபதியின் முன்னிலையில் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
அமெரிக்கா கடும் கண்டனம்!
குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அதுல் கெஷாப் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக் காலங்களில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டுமெனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten