தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 mei 2017

கிரீஸ் அகதிகள் விடயத்தில் ஜேர்மனியின் திடீர் முடிவு

அகதிகள் தங்கள் குடும்பத்தினருடன் இணையும் முறை இனி மெதுவாக தான் செயல்படுத்தப்படும் என ஜேர்மனியும், கிரீசும் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளன.
கிரீஸ் குடிவரவு அமைச்சர் Yiannis Mouzalas, ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் Thomas deக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
நீங்கள் கூறியபடி ஜேர்மனியில் இருக்கும் கிரீஸ் அகதிகளுடன், அவர்கள் குடும்பம் இணையும் விடயத்தில் நடவடிக்கை இனி மெதுவாகவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், அதிகளவிலான மக்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர விரும்புகிறார்கள். தற்போது இரண்டாயிரம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் அவர்கள் இன்னும் சில வருடங்கள் காத்திருப்பார்கள் என கூறியுள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டின் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் குடிபெயர 6 மாதத்தில் ஒப்புதல் வழங்கப்படும்.
ஆனால், கிரீஸிலிருந்து வருபவர்களின் அதிகம் பேர் சிரிய அகதிகளாக இருப்பதால் பாதுகாப்பு கருதி தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
புலம்பெயர்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைவதில் ஆர்வமாக இருப்பதை நாங்கள் உணர்கிறோம்.
ஆனால், அதிகளவு மக்கள் ஒரே சமயத்தில் இப்படி போக நினைப்பதால் இது தவிர்க்க முடியாத ஒன்று என Mouzalas தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 70 பேர்களை மட்டுமே தங்கள் குடும்பத்தினருடன் ஒரு மாதத்தில் இணைய வைக்க ஜேர்மனி முடிவெடுத்துள்ளது.
இந்த கடுமையான முடிவு காரணமாக கடந்த மாதம் 70 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், இதே எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 540ஆகவும், பிப்ரவரியில் 370ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/germany/03/126148?ref=right_featured

Geen opmerkingen:

Een reactie posten