இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளியான நாதுராம் கோட்சே, நாராணயன் ஆப்தே ஆகியோருக்கு 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
எனினும் காந்தி கொலை வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என்றும் இதன் பின்னணியில் உள்ள மிகப் பெரிய சதியை கண்டறிய புதிய விசாரணை கமிஷனை நியமிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பங்கஜ் ஃபட்னீஸ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,
“மகாத்மா காந்தி மீது 4 குண்டுகள் பாயந்துள்ளன. அவரை சுட்ட கோட்சேவின் துப்பாக்கியில் 7 குண்டுகள் மட்டுமே பொருத்த முடியும். மேலும் அவரது துப்பாக்கியில் 3 குண்டுகள் சுடப்பட்டு மீதமிருந்த 4 குண்டுகளை பொலிஸா பறிமுதல் செய்திருந்தனர்.
காந்தியின் உடலை துளைத்த 4ஆவது தோட்டா யாருடையது. இந்த படுகொலை தொடர்பாக கடந்த 1966-ஆம் ஆண்டு நீதிபதி ஜே.எல்.கபூர் தலைமையிலான விசாரணை குழு நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் தோண்டி எடுக்கப்படவில்லை.
காந்தியின் கொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. இதனால் பல்வேறு உண்மைகளை நாட்டுக்கு தெரியப்படுத்த புதிய விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மகாத்மா காந்தி, கடந்த 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காந்தி படுகொலைக்கு நாதுராம் கோட்சே, விநாயக் தாமோதர் சாவர்கர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/india/01/147288?ref=home-feed
Geen opmerkingen:
Een reactie posten