தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 mei 2017

பிரித்தானியாவில் தீவிரவாதி தாக்குதல் நடத்தியது எப்படி? வெளியானது சிசிடிவி காட்சிகள்

மான்செஸ்டரில் தீவிரவாதி எப்படி வந்து தாக்குதல் நடத்தியுள்ளான் என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள மைதானத்தில் பிரபல அமெரிக்க பாப் பாடகியான Ariana Grande-யின் நிகழ்ச்சியின் போது தீவிரவாதி நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர். 120 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் பிரித்தானியா மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பொலிசார் இதுவரை 13 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதியான Salman Abedi எப்படி வந்து தாக்குதல் நடத்தியுள்ளான் என்பது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் வீடியோவை வெளியிடாமல் அது தொடர்பான புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதில் Salman Abedi £300 பவுண்ட் மதிப்புள்ள Nike ஷூ காலில் அணிந்து கொண்டு, முகத்தில் கண்ணாடி, தலையில் baseball தொப்பி மற்றும் புளு கலர் ஜீன், Hollister puffa அணிந்துகொண்டும், பின் புறம் தன் வீட்டில் செய்த வெடிகுண்டை பையில் வைத்துக் கொண்டும் Victoria Station-ல் இறங்கியுள்ளான்.
அதன் பின் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருக்கும் லிப்டில் ஏறி செல்கிறான். அப்போது அங்கிருக்கும் சிசிடிவி காட்சியில் தெரியவந்துள்ளது. அவன் Detonator-வைத்துள்ளான் என்று, அதைத் தொடர்ந்து நடந்து செல்லும் அவன் 10.33 இரவு உள்ளூர் நேரப்படி மான்செஸ்டர் அரெனா அரங்கை அடைகிறான்.
அங்கு நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மக்கள் கூடியிருந்த வேளையில் பாக்ஸ் ஆபிஸ் ஏரியா பகுதியில் தான் வைத்திருந்த Detonator-ஐ அழுத்தி வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளான். இதனால் வெடித்த குண்டில் இருந்து போல்ட் மற்றும் நட்டுகள் போன்றவை வெடித்து சிதறியதால் அங்கிருந்த கூட்டத்தில் ஏராளமானோர் படுகாயமடைகின்றனர்.
அதன் பின் தீவிரவாதி நடத்திய இக்கொடூர தாக்குதலால் 22-பேர் பலியாகியுள்ளனர். இதில் Salman Abedi தொடர்பான இரண்டு புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
Salman Abedi-யின் வீட்டை சோதனை செய்த போது அவன் வீட்டில் ஏராளமான வெடி பொருட்கள் மற்றும் குண்டுகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி Salman Abedi வெடிகுண்டு தயாரிப்பதற்கு படிப்பதாக கூறி அங்கு வங்கியில் கடன் வாங்கியுள்ளான் என்றும் வங்கி கடன் வாங்கியவுடன் அவன் கல்லூரியை விட்டு நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
http://news.lankasri.com/uk/03/126003?ref=lankasritop

Geen opmerkingen:

Een reactie posten