கடைக்கு வரும் இளம் யுவதிகளுக்கு இனிப்பு மற்றும் ரீசார்ஜ் செய்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இளவரசன் மற்றும் வினோதன் ராஜேந்திரன் என்ற சகோதரர்கள், ஒன்பது யுவதிகளுக்கு மதுபானம் வழங்கி அவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
26 வயதுடைய இளவரசனுக்கு 22 1/2 வருட சிறை தண்டனையும் 27 வயதுடைய வினோதன் ராஜேந்திரனுக்கு 18 1/2 வருட சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் இவர்கள் மீது 30 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் அவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய போது, இளம் யுவதிகளை இலக்காகக் கொண்டு கடையில் தவறாக நடந்து கொண்டதாக நீதிபதி நோர்மன் ரைட் தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு முதல் 2016 ஜனவரி வரையான காலப்பகுதியில் பிர்ஹென்ஹெட், வால்டன் மற்றும் கர்ஸ்டனில் என்ற இடத்தில் குறித்த சகோதரர்கள் வேலைக்குச் சென்றிருந்தார்கள்.
இந்த நிலையில் 14 மற்றும் 15 வயதுடைய பதின்ம யுவதிகளுக்கு இலவச இனிப்பு மற்றும் மொபைல் ரீசார்ஜ் செய்து குறித்த சகோதரர்கள் இருவரும் அவர்களின் நம்பிக்கையை வென்றுளளனர்.
அதன் பின்னர் குறித்த இருவரும் அந்த பெண்களை வாகன பயணத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இறுதிக்கட்டமாக அந்த பெண்களை குடியிருப்பு ஒன்றிற்கு அழைத்து சென்று மதுபானம் வழங்கியுள்ளதுடன், அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக நீதிபதி ரைட் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/uk/01/145892?ref=lankasri-home-dekstop
Geen opmerkingen:
Een reactie posten