தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 mei 2017

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதி அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பாரா?

சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி தேர்தலில் லிபரல் செண்ட்ரிஸ்ட் கட்சியை சேர்ந்த இம்மானுவேல் மேக்ரான் அபாரமாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் 1958-ம் ஆண்டு முதல் பெரும்பான்மை பெற்ற இரண்டு முக்கிய கட்சிகள் மட்டுமே தொடர்ந்து ஆட்சியை பிடித்து வந்துள்ளன.
ஆனால், இந்த வழக்கத்தை உடைத்த மேக்ரான் எதிரணி வேட்பாளரான லீ பென்னை தோல்வி அடைய செய்து சுமார் 65 சதவிகித வாக்குகள் மூலம் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை வழிநடத்திய நெப்போலியன் போனபர்ட்டிற்கு பிறகு மிகவும் இளம்வயதில் உயரிய பதவிக்கு வந்துள்ளது இம்மானுவேல் மேக்ரான் தான். இவருக்கு வயது 39.
இதன் மூலம் சர்வதேச அளவில் இளம் தலைவர்களின் பட்டியலில் மேக்ரான் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அகதிகளுக்கு ஆதரவாக செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுக் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின்போது மேக்ரான் ஒரு உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்.
அண்டை நாடான ஜேர்மனியில் சான்சலர் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருவதை மேக்ரான் வெகுவாக பாராட்டியுள்ளார்.
மேக்ரானை எதிர்த்து போட்டியிட்ட லீ பென் ‘அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். ஆனால், இதனை மேக்ரான் வரவேற்கவில்லை.
இது குறித்து மேக்ரான் பேசியபோது, ‘பிரான்ஸ் நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
பாதுகாப்பு தேவைப்படும் அகதிகளுக்கு நிச்சயமாக பிரான்ஸ் அடைக்கலம் வழங்கும். ஆனால், தகுதி இல்லாத புலம்பெயர்ந்தவர்கள் உடனடியாக தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
புலம்பெயர்ந்தர்களின் கோரிக்கையை அடுத்த 6 மாதங்களுக்குள் பரிசீலிக்கப்படும் எனவும் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/france/03/124845?ref=lankasritop

Geen opmerkingen:

Een reactie posten