தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 mei 2017

ஜேர்மனியில் ஒபாமா: அகதிகள் குறித்து உருக்கமான பேச்சு

ஜேர்மனி நாட்டிற்கு சென்றுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா அகதிகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று காலை ஜேர்மனிக்கு வந்த ஒபாமாவை அந்நாட்டு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
தலைநகர் பெர்லினில் உள்ள Brandenburg Gate என்ற பகுதியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் ஒபாமா மற்றும் ஏஞ்சலா மெர்க்கல் உரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.
அப்போது, ‘அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த தலைவர்களில் ஒருவராக ஏஞ்சலா மெர்க்கல் பணியாற்றியுள்ளார்.
ஜேர்மனியில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் அவர் காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது’ என ஏஞ்சலா மெர்க்கலை புகழ்ந்து பேசியுள்ளார்.
பின்னர், அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் டொனால்ட் டிரம்ப் சுவர் எழுப்புவதை ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
‘கடவுளின் பார்வையில் அனைவரும் சமமானவர்கள் தான். எல்லை சுவற்றிற்கு அப்பால் உள்ள குழந்தையுடனும் என்னுடைய குழந்தையுடனும் ஒரே அன்பை தான் காட்ட வேண்டும்’ என அகதிகளுக்கு தனது ஆதரவு குரலை ஒபாமா தெரிவித்துள்ளார்.
மேலும், சொந்த நாட்டை விட்டு அகதிகளாக குடிமக்கள் பிற நாடுகளுக்கு செல்லாதவாறு அரசாங்க தலைவர்கள் திறமையாக செயல்பட வேண்டும் எனவும் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மான்செஸ்டர் நகரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதலையும் ஒபாமா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/germany/03/125859?ref=morenews

Geen opmerkingen:

Een reactie posten