தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 mei 2017

இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களை நாடு கடத்த பிரித்தானியா திட்டம்!

வெளிநாட்டவர்களை நாடுகடத்தும் பிரித்தானியாவின் தீர்மானத்தை இந்தியா நிராகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையர் உள்ளிட்டவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் திட்ட பிரேரணையை இந்தியா நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் பிரித்தானிய உள்நாட்டு விவகார மட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள இந்தியர்களை நாடு கடத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்த வரைவு ஒன்று இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த வரைவின் கீழ் நாடுகடத்தப்படுகின்ற அகதிகள், பெரும்பாலும் இலங்கை மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் கடவுச்சீட்டின் ஊடாக பிரித்தானியா சென்றுள்ளனர். இதன்மூலம் தங்களை இந்தியர்களாக அடையாளம் காட்டி அகதி அந்தஸ்த்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.
அவர்கள் இந்தியர் அல்லாத நிலையில், அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten