தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 mei 2017

உலகிற்கு புலிகளின் தலைவர் அறிமுகப்படுத்திய அருமை! பிரபாகரனை கொன்றதே கடைசி தோட்டா!!

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர் தீவிரவாதத்தை முன்னிட்டு ஒரு துப்பாக்கி கூட தோட்டாவை சிந்தவில்லை என மேஜர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யுத்த வெற்றி தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார்.
மேலும் குறித்த காணொளியில் அவர் தெரிவித்துள்ளதாவது,
முழு உலகத்திற்குமே தற்கொலை குண்டுதாரிகள் எனும் அருமையினை அறிமுகப்படுத்தியது பிரபாகரனே. ஆனாலும் அந்த அருமையினை அவர் எமது மக்களை கொல்வதற்காகவே பயன்படுத்தினார்.
மேலும் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர், 30 வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் நாட்டு மக்கள் அனைவரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வந்தனர்.
ஆனால் அந்த அச்சத்தினைப் போக்கிய இராணுவ வீரர்களின் நிலை இன்று கேள்விக்குறியாகிவிட்டது. நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த இராணுவ வீரர்கள் தாக்கப்படுகின்றார்கள்.
அதே போன்று புலனாய்வுத் துறையினரும், இராணுவ வீரர்களும் அவமரியாதைக்கு உட்படுத்தப்படுவதோடு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றனர். இது வேதனைக்குரிய விடயமாகும்.
நாட்டுக்காக பாடுபட்ட இராணுவத்தினரின் சேவை மிகையற்றது. சுமார் 3 வருட காலப்பகுதியில் மட்டும் 5900 இராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். 29000 வீரர்கள் படுகாயங்களை அடைந்தனர்.
இதனை மறந்துவிட்டு செயற்படுவது நல்லதல்ல. அதேபோன்று இலங்கையில் ஒரு தரப்பிற்கு அதிக அதிகாரமும் இன்னோர் தரப்பிற்கு குறைவான அதிகாரமும் வழங்கி வைக்க முடியாது.
அனைவருக்கும் சமமான அதிகாரமே கொடுக்கப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியம். அத்தோடு அனைத்து இனமக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
மேலும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனை எமது இராணுவத்தினர் கொன்றார்கள்.
அன்று அவரைக் கொன்ற அந்த இறுதி யுத்த துப்பாக்கிச் சூடே இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக வெடித்த கடைசித் தோட்டா. அதன் பின்னர் இன்று வரை இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை.
குறிப்பாக ஒரு குண்டும் வெடிக்கவில்லை, ஒரு துப்பாக்கித் தோட்டாவும் தீவிரவாதம் காரணமாக வெளிவரவில்லை. நாட்டில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூடுகள் அனைத்தும் பாதாள உலகக் கோஷ்டிகளின் செயற்பாடுகள் மட்டுமே.
மாறாக அவற்றில் தீவிரவாதம் சம்பந்தப்பட்டோ, தீவிரவாதத்திற்கு எதிராகவோ எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது நிச்சயம் எனவும் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten