இதன் தலைவர் ஞானசார தேரருக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக அமைதியாக இருந்த அவர் மீண்டும் தனது அடாவடித் தனத்தையும், இனவாதத்தையும் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இன்றைய தினம் அமைச்சர் மனோகணேசனைச் சந்திப்பதற்காக அவருடைய அலுவலகத்திற்கு ஞானசார தேரர் உட்பட பிக்குமார்கள் சிலரும் சென்றிருந்தனர்.
அவர் சென்ற வேளை அமைச்சர் அலுவலகத்தில் இல்லாதமையினால் ஞானசார தேரர் கடுமையான கோபம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது “நாட்டின் பிரதமரையும், ஜனாதிபதியையும் கூட நாங்கள் விமர்சனம் செய்கின்றோம். ஆனால் அவர்களைச் சந்திக்க எமக்கு நேரம் ஒதுக்கப்படுகின்றது”
“ஆனால் இவர் யார், எம்மை புறக்கணிக்கதற்கு உடனடியாக வரச்சொல்லுங்கள் என கடுமையான தொணியில் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பிக்கு ஒருவரும் “வருகின்றாரா இல்லையா எனக் கேளுங்கள் இல்லையேன், அலுவலகத்தை முற்றுகையிடுவோம் எனக் கூறுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக அமைச்சரின் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிக்குகள் குழு அதிகாரப்போக்கினையும் அங்கு மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் நாட்டின் அமைச்சர் ஒருவருக்கு மதிப்பளிக்காது நடந்து கொண்ட விதத்தினை அங்கிருந்த பொலிசாரும் அமைதியாக வேடிக்கைப் பார்த்தமையும் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அண்மைக்காலமாக அடங்கியிருந்த ஞானசார தேரர் மீண்டும் இனவாதச் செயற்பாடுகளிலும் அடாவடித்தனத்திலும் பகிரங்கமாக ஈடுபட்டு வர ஆரம்பித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இந்தச் சம்பவத்தின் பின்னர் அமைச்சர் மனோ கணேசனுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் ஞானசார தேரர் கடுமையான அதிகாரத் தொணியினை பயன்படுத்தியிருந்தார்.
எனினும் அமைச்சர் அவரின் அதிகாரத் தொணிக்கு கட்டுப்படாமல், அமைதியாக பதில் அளித்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten