குறித்த விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த தம்பதி மீதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விடுதியின் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், குறித்த தம்பதியர் விடுதியினை ஒப்படைத்துவிட்டு, விடுதி உரிமையாளரிடம் முற்பணத்தை கோரியபோது இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், உரிமையாளர் மேற்படி தம்பதியர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 நாகராசா திருக்குமார் இல 6, 30 வீட்டு திட்டம், உதயநகர் மேற்கு என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி திருக்குமார் கிருஷ்ணவேணி வயது-40 படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி ப் பொலிசார் மேற்கொண்டு வருகிள்றனர்.
http://www.jvpnews.com/crime/04/126893
Geen opmerkingen:
Een reactie posten