பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள Porte de la Chapelle பகுதிக்கு இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலையில் 350-க்கும் அதிகமான பொலிசார் குவிக்கப்பட்டனர்.
அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமிற்கு சென்ற பொலிசார் அங்கு தங்கியிருந்த 1600 பேரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.
சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்ட இந்த முகாம், அதிகாரப்பூர்வமாக அரசால் அமைக்கப்பட்ட அகதிகள் முகாம் அருகில் உள்ளது.
அதிகாரப்பூர்வ முகாமில் அதிகளவில் அகதிகள் தங்கியுள்ளதால் அங்கு இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அகதிகள் தனியாக வேறு முகாம் அமைத்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
அகதிகளை அங்கிருந்து வெளியேற்றும் போது, அவர்களுக்கும் பொலிசாருக்கும் நடந்த மோதலில் சிலர் காயம் அடைந்தனர்.
அவர்கள் சட்டபூர்வமான இடத்தில் தங்கவைக்கப்படுவார்கள் என தெரிகிறது.
இது குறித்து கூறிய பிரான்ஸ் வீட்டு வசதி துறை அமைச்சர் Emmanuelle Cosse, Porte de, இந்த பகுதியில் உள்ள முகாம்கள் ஆபத்து ஏற்படுத்தகூடிய முகாம்களாக மாறி வருகிறது.
சட்டத்துக்கு விரோதமாக தங்கியுள்ள இவர்களை முன்னரே இங்கிருந்து வெளியேற்றியிருக்க வேண்டும்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் அதிகளவு பொலிசார் இருந்ததால் சில நாட்கள் தாமதமாகி விட்டது என அவர் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten