அருவருக்கத்தக்க,விதியை மீறிய செயல்களை புரிந்தோரே இன்று நாட்டின் தலைவர்கள் ஆக்கப்படுகின்றார்கள்!
இது அழிவுதானே!
புதிதாக பதவியேற்கவிருக்கும் இவரின் வயது 39. சர்வதேச அளவில் இளம் தலைவர்களின் பட்டியலில் மேக்ரோன் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
இவரின் வெற்றி கொண்டாடப்படுவது போலவே, இவரது சுவாசியமான காதல் கதையும் அந்நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது.
காரணம், தன்னை விட 24 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதுதான். இவரின் மனைவி பிரிகெட்டி.
யார் இந்த பிரிகெட்டி?
இமான்வெல் 15 வயது சிறுவனாக இருந்தபோது, புத்திசாலியாகவும், படுசுட்டியாகவும் இருப்பாராம்.
மியென்ஸில், ஜெஸ்யூட் தனியார் பள்ளியில் மாணவராக இருந்தபோது, பிற பெரியவர்களுடன் சமமான நட்பை கொண்டிருந்ததாக சொல்கிறார், அவரது முன்னாள் நாடக ஆசிரியரும், இன்னாள் மனைவியுமான பிரிகெட்டி. அப்போதே அந்த புத்திசாலி மாணவனால் கவரப்பட்டேன் என்கிறார் அவர்.
அண்ட்ரே ஒளஜைர் என்ற வங்கியாளரை திருமணம் புரிந்து, மூன்று குழந்தைகளுக்கு தாயான பிரிகெட்டி ட்ரோங்னெக்ஸ், பிரபல சொக்லேட் நிறுவன குடும்ப வாரிசு ஆவார்.
தனது மகன் காதல்வயப்பட்டிருப்பது தெரிந்தாலும், காதலி யார் என்று தெரியாமல் இருந்த மேக்ரோன் பெற்றோருக்கு, அது பிரிகெட்டி என்று தெரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது.
வேறு வழியில்லாத நிலையில் மேக்ரோன் 18 வயதாகும்வரை ஒதுங்கியிருக்குமாறு பிரிகெட்டியை கேட்டுக்கொண்டனர். மேக்ரோனுக்காக எந்த உறுதியும் அளிக்க தயாராக இருந்தேன் என்கிறார் பிரிகெட்டி.
சக மாணவியான லாரன்ஸ் ஒளஜைரின் மீது மேக்ரோனுக்கு காதல் இருக்கலாம் என்று பிறர் ஊகித்திருந்த நிலையில், மேக்ரோன் காதலிப்பது அவரின் தாயார் பிரிகெட்டியை என்பது ஆச்சரியமாக இருந்தது என்று, மேக்ரோன் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக்கியுள்ள அனே ஃபுல்டா குறிப்பிட்டுள்ளார்.
17 வயதாக இருந்தபோது, ஒருநாள் நாம் இருவரும் கட்டாயம் திருமணம் செய்து கொள்வோம் என்று தனது காதலிக்கு வாக்களித்த மேக்ரோன், 2007 இல் அந்த வாக்கை பூர்த்தி செய்தார்.
பிரிகெட்டி எனது மருமகள் என்பதைவிட சிறந்த தோழி என்று மேக்ரோன் தாயார் சொல்கிறார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தபோது, குடும்பத்தினர் அனைவரும் ஒரே மேடையில் கூடி, வெற்றியை கொண்டாடினார்கள்.
மேக்ரோன், பிரான்சின் பொருளாதார அமைச்சராக பதவியேற்றபோது, பிரிகெட்டி தனது ஆசிரியப் பணியை விட்டு விலகி, கணவரின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten