தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 mei 2017

லண்டனுக்கு இலங்கையர்களை அனுப்பி வைக்க முயன்ற முகவர் கைது

போலி கடவுச் சீட்டுடன் லண்டனுக்கு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் தொடர்பான வழக்கில் மற்றுமொரு இலங்கையர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த இலங்கையர் கடந்த வெள்ளிக்கிழமை, மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், போலி கடவுச் சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டு காரணமாக இலங்கை பிரஜைகள் நால்வர் உள்ளிட்ட எட்டு வெளிநாட்டு பிரஜைகளை இந்திய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த எட்டு சந்தேகநபர்களுடன் தொடர்புடைய தேவ குமரன் என்ற நபரே இவ்வாறு வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த இலங்கைப் பிரஜைகளை லண்டனுக்கு அழைத்து செல்லும் நோக்கில் பிரித்தானிய பிரஜைகளின் உதவியுடன் குமரன் என்பவர் முகவராக செயற்பட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
எனவே, கைது செய்யப்பட்ட குமரன் என்ற இலங்கை பிரஜை நேற்றைய தினம் உள்ளூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை, இந்த மாதம் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி, இலங்கை பிரஜைகளை சட்டவிரோதமான முறையில் லண்டனுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஒவ்வொருவரிடமும் இருந்து 17 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்ட நான்கு பிரித்தானிய பிரஜைகள், சாஹார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/statements/01/144954?ref=lankasri-home-dekstop

Geen opmerkingen:

Een reactie posten