மலேசியாவின் கோலாலம்பூர் நகரை சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான லீனா ஹென்றி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற 26 வருட கால யுத்தத்தை ஒரு ஆவணப்படமாக எடுத்து, பட தணிக்கை குழுவின் அனுமதி ஏதும் பெறாமல் படத்தை திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த ஆவணப்படத்தில், தணிக்கை கட்டுப்பாடுகளை மீறி, யுத்த நிறுத்த வலயங்கள் மற்றும் யுத்தகள கொலைகளை காண்பித்த குற்றத்தை உறுதி செய்து, பட தணிக்கை மோசடியில் கீழ் வழக்கு பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லீனா கடந்த 2013ஆம் ஆண்டு இதே நீதிமன்றத்தினால் குற்றமற்றவராக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். குறித்த தீர்ப்பை அளித்த நீதிபதிதான் தற்போதய தீர்ப்பையும் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
அத்தோடு குறித்த தணிக்கை மோசடியிற்காக லீனாவிற்கு மூன்று வருட சிறை அல்லது 17 இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்படவும், அல்லது இரண்டு தண்டனையும் ஒன்றாக வழங்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய நீதிமன்றின் தீர்ப்பினை பற்றி கருத்து தெரிவித்துள்ள லீனா, நீதி மன்றம் தீர்ப்பு தன்னை ஏமாற்றியுள்ளதாகவும், வழக்கு குறித்த போதுமான ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை, தீர்ப்பு வெறுமனே வழக்கறிஞ்சரின் குற்றசாட்டுகளை மையப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து தான் மேன்முறையீடுகளை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
Geen opmerkingen:
Een reactie posten