குறிப்பாக இலங்கை இராணுவத்தினர் தமிழ் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டும் தற்போது சூடுபிடித்து வருகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்ட தொடரும் இலங்கைக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறான காரணங்களினால் தற்போது மக்கள் மத்தியில் இலங்கை இராணுவத்தினரின் சேவை அதிகமாக பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தின் போது செய்த சேவைகள், பயிற்சிகள் போன்ற பல்வேறு விடயங்களை கடந்த சில நாட்களாக வேகமாக பரப்பப்பட்டு வருகின்றது.
இதன் அடுத்த படியாக இலங்கை இராணுவத்தின் மகளிர் அணி தொடர்பிலான காணாளி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் இலங்கையின் பெண் படையினரின் சிறப்பு, அவர்கள் யாழை கைப்பற்ற ஆற்றிய சேவைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை யுத்தத்தில் பெரும் பங்களிப்பினை பெண் படையினர் செய்து வந்தார்கள். அவர்கள் சேவை மறக்கப்பட கூடாது என்ற வகையில் அந்த காணொளி அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை இராணுவத்தினர் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு வலுப்படுத்தப்பட மறுபக்கம் இலங்கையின் மகளிர் படை அணி பற்றிய சிறப்பு வெளிப்படுத்தப்படுகின்றது.
யுத்தம் மௌனிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்த நிலையில் இவ்வாறாக காணொளிகளை தற்போது வெளியிட்டு வருவது ஒரு வகையில் இலங்கை இராணுவத்தினரின் போர்க்குற்ற விசாரணைகளை குழப்பி மக்கள் மத்தியில் புதுக்கருத்துக்களை திணிக்கும் நடவடிக்கைகளாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை முடிந்த யுத்தத்தை மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் நினைவு படுத்தப்பட்டு வருவதற்கும் அரசியல் ரீதியான உள்நோக்கங்களை கொண்டதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten