தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 februari 2017

ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் வாழும் உரிமையை இழக்கும் அபாயம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியமையின் பின்னர், பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு நிரந்த வதிவிடம் பெறும் உரிமை ரத்து செய்யப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக பிரித்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை விலக்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் வாழ்வதற்கான உரிமையை இழந்து விடலாம் என சில பிரித்தானிய ஊடகங்களும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பிரித்தானியாவுக்குள் புதிதாக வரும் குடியேற்றவாசிகளுக்கு பிரெக்சிற்றின் பின்னரான நடைமுறைகள் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தெரேசா மே அதிரடி: பிரித்தானியாவிலிருந்து ஐரோப்பியர்கள் வெளியேற்றம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரத்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கான Free Movement-யை பிரதமர் தெரேசா மே அடுத்த மாதம் முடிவுக் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் சட்டப்பிரிவு 50 அமல்படுத்தப்பட்ட பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் நிரந்தரமாக பிரித்தானியாவில் இருக்க முடியாது என அறிவிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானிய வெளியேறிய பின்னர் புதிய குடியேறிகளுக்கு, புதிய விசா உட்பட இடம்பெயர்வு தடை உட்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
குறிப்பிட்ட திகதிக்கு முன் பிரித்தானியாவில் குடியேறிய ஐரோப்பிய ஒன்றிய குடியேறிகளின் உரிமை பாதுகாக்கப்படும் என தெரேசா மே உறுதியளிப்பார்.
அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் பிரித்தானிய குடிமக்களின் உரிமையும் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten