தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 februari 2017

இலங்கை அரசின் அவசர அறிவிப்பு -பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு தேசிய ஆணைக்குழு

பெண்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் தேசிய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அரச படையினரால் தமிழ் பெண்கள் பாலியல் துஷ்பியோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து அரசாங்கம் இந்த அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் இலங்கைக்கு நெருக்கடியாக அமையலாம் என கருதப்படுகின்றது.
இந்நிலையிலேயே, பெண்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு தேசிய ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிராக குற்றபுரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச படையினரால் தமிழ் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும், இந்த குற்றச்சாட்டிற்கு இலங்கை இராணுவம் மறுப்பு வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten