தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 februari 2017

நேற்று மட்டு களுதாவளையில் நடைபெற்ற கொலை முயற்சியில் திடுக்கிடும் காரணங்கள்……….

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளையில் கொலை முயற்சி அல்லது அச்சுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பு மிக்க பதவியான காணி சீர்திருத்த பணிப்பாளர் போன்ற தமிழர் இனி இப்படி பதவியில் வருவதற்கு அஞ்ச வேண்டும் எனும் தொனியில் துப்பாக்கியால் உயிரை எடுப்பதற்கு முயற்சி நடைபெற்றது.
சில வேளை இவர் உயிரிழந்திருந்தால் இவ்விடத்திற்கு சகோதர இனத்தை சார்ந்தவர் வரக்கூடியநிலை காணப்பட்டது.
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக துணிந்து செயற்பட்ட மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமிழரான நேசகுமார் விமல்ராஜ் அவர்கள் நேற்று சுடப்பட்டுள்ளார்.
குறிப்பாக ஏறாவூர் புண்ணைக்குடா வீதி, தளவாய், சவுக்கடி போன்ற பிதேசங்களில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் , பனைவளங்களின் அழிப்பு, அரசகாணிகளை அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்து விரைவாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு அதிகாரி.
பல தடவை ஏறாவூரை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சுபைர் ஆதரவாளர்களால் அச்சுருத்தப்பட்டார்.
எத்தனையோ அரசியல்வாதிகள் அச்சத்தில் மௌனங்காத்த போதும் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நியாயத்துக்காக கூடவே நின்றவர். தொடர்ந்தும் நிற்பவர்.
நிச்சயமாக இவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாவண்ணம் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும்.
யுத்தம் கிழக்கை விட்டு 2008ம் ஆண்டு மௌனித்த பின் இதுவரை முஸ்லிம் நகரங்களின் அருகிலுள்ள தமிழ் கிராம ஆலயங்கள், பண்பாட்டு தலங்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தியும், பெண்களை பாலியல் சேட்டைகளை செய்து பாதுகாப்பாற்ற நிலையை உருவாக்கி முஸ்லிம் இன மக்களுக்கு காணியை விற்பனை செய்ய வேண்டும், ஆக்கிரமிக்க இலகுபடுத்த நுணுக்கமாக ஒவ்வொரு காரியமும் நடைபெறுகின்றது.
யுத்தத்தின் பின் கிழக்கில் வாகனேரி பிள்ளையார் ஆலயம் மூன்று தடவை சேதம், ரிதிதென்ன பிள்ளையார் ஆலயம் மீதான தாக்குதல், மீறாவோடை ஆலயம் மீதான தாக்குதல், ஆரையம்பதி நரசிம்மர் ஆலயம் தாக்குதல், காத்தான்குடி ஆரையம்பதி எல்லை சிலை சேதம், கல்முனை நகர் தரவைச்சித்தி பிள்ளையார் ஆலயம், கடற்கரை கண்ணகி ஆலயம் உண்டியல் கதவு உடைப்பு, சம்மாந்துறை அகோரி மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு, திராய்க்கேணி மீனாட்சியம்மன் ஆலயம் தாக்குதல், காரைதீவு கண்ணகியம்மன் ஆலயம் கதவு உடைப்பு,பெரியநீலாவணை சவுக்காலை கல்லறை உடைப்பு ,திருகோணமலை கல்லடி நீலியம்மன் ஆலயம் எரிப்பு இப்படி தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு தலங்களை குறித்த 9வருடத்தில் சேதமாக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்கள் பலவற்றில் சகோதர இனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதும் மனநோயாளிகள் என குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு.
கடந்தமாதம் 31ம்திகதி ஏறாவூரில் துப்பாக்கியுடன் ரவூப் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.அதற்கு முந்திய கிழமை இன்னொருவரிடம் இருந்து துப்பாக்கி ரவை கைப்பற்றப்பட்டமை போன்ற இவ் கொலை முயற்சியிற்கு ஏதும் தொடர்புள்ளதா என சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
இனி வரும் காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளை நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை கருதாமல் வடக்கில் கோப்பா புலவு மக்களை போன்று நமது காணி ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் மாற்று இனத்தவர் அச்சுறுத்தலுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten