தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 21 februari 2017

கூட்டமைப்பு முன்வைத்த முக்கிய கோரிக்கை: கைவிரித்தது இந்தியா - விடுதலைப் புலிகளே தடம்புரள செய்தனர்

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான நேற்றைய சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பு குறித்து 1987ஆம் ஆண்டு இந்தியா உறுதி மொழி வழங்கியிருந்தது.
அந்த உறுதி மொழியை இந்தியா நிறைவேற்ற வேண்டும். மேலும், இந்த விடயம் குறித்து வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாது எனவும் இந்தியா உறுதி வழங்கியிருந்தது.
எனினும், 2006ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட போது இந்தியா மௌனம் காத்தது. இந்த விடயத்தில் இந்தியா தெளிவான அக்கறை கொண்டிருக்கவில்லை என கூட்டமைப்பின் சார்பில் சுரேஸ்பிரேம சந்திரன் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், 1987ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் இன்று நிலைமை மாறிவிட்டது. பல்வேறு வாய்ப்புகள் தற்போது திறந்து விடப்பட்டுள்ளன.
இந்த வாய்ப்புகளை கொண்டு தமிழ் மக்கள் தமது உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனைய விடயங்கள் குறித்து பேசும் போது வடக்கு கிழக்கு இணைப்பை பணயம் வைக்க கூடாது.
இந்திய - இலங்கை உடன்படிக்கையினை ஒருதலைபட்சமாக நடைமுறைப்படுத்த முடியாது. இந்த உடன்படிக்கையினை தடம் புரளச் செய்யும் நோக்கிலேயே விடுதலைப் புலிகள் ராஜூவ்காந்தியை படுகொலை செய்தனர்.
மேலும், இந்த உடன்படிக்கைக்கு எதிரானவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படுவதையும் விடுதலைப் புலிகள் எதிர்ப்பார்த்திருந்தனர்.
எவ்வாறாயினும், இந்த விடயத்தை தமிழ் மக்கள் உயிரிப்புடன் வைத்திருந்தால் இந்தியா அதனை கருத்தில் கொள்ளாது. இலங்கையுடனான பேச்சுகளின் போதும் இது குறித்து கவனத்தில்கொள்ளப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten