ரெய்ஸ் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சியைச் சார்ந்த டாம் காட்டன் மற்றும் ஜனநாயக கட்சியைச் சார்ந்த டேவிட் ப்ரூடு ஆகியோர் Reforming American Immigration for Strong Employment என்ற ரெய்ஸ் சட்டத்தைச் சமர்ப்பித்துள்ளனர். இச்சட்டம் தற்போது அமெரிக்க அரசு பின்பற்றி வரும் குடியுரிமை சட்டத்தை முழுமையாக மாற்றியமைக்க உள்ளது. மேலும் இது அமலாக்கம் செய்யப்பட்டால் திறன் சார்ந்த விசா இல்லாமல் குடியுரிமை பெற முடியாது.
50 சதவீத குறைப்பு இப்புதிய சட்ட விதிமுறைகளில் கிரீன்கார்டு எண்ணிக்கை பாதியாகக் குறைக்க வழியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் கிரீன்கார்டு அளிக்கும் அமெரிக்க அரசு சட்ட மசோதா நிறைவேற்றிய பின் வெறும் 5 லட்சம் கிரீன்கார்டுகளை மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கும்.
காத்திருப்புக் காலம் தற்போதைய நிலையில் ஒரு இந்தியர் கிரீன்கார்ட் பெற வேண்டும் என்றால் 10 வருடமும் முதல் 35 வருடம் வரை காத்திருக்க வேண்டும். இப்புதிய சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால் காத்திருப்புக் காலம் அதிகரிக்கலாம், மேலும் இது எச்-1பி விசா தொடர்புடையதல்ல.
அமெரிக்க மக்களின் சம்பளம் வெளிநாட்டு மக்களின் அதிகளவிலான குடியேற்ப்பு காரணமாகக் கடந்த 10 வருடத்தில் இந்நாட்டு மக்களின் சம்பம் அதிகளவில் குறைந்துள்ளது. இதை முழுமையாகத் தடுக்க வேண்டும் என்பது மட்டும் அல்லாமல் கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருப்பது போல மெரிட் சிஸ்டத்தை அமெரிக்காவில் கொண்டு வர இச்சட்டம் உதவி செய்யும் குடியரசு கட்சியைச் சார்ந்த டாம் காட்டன் தெரிவித்தார்.
லாபம் RAISE சட்டம் அமலாக்கம் செய்வதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு அதிகளவிலான சம்பளத்தை அளிக்க முடியும், அதுமட்டும் அல்லாமல் அமெரிக்கா அமெரிக்க மக்களுக்காக உருவாக்கப்படும் அளவிற்கு இச்சட்டம் உதவும் எனத் தெரிவித்தார் டாம் காட்டன்.
50 சதவீத குறைப்பு RAISE சட்டத்தின் மூலம் முதல் வருடத்தில் 6,37,960 ஆகவும், 10வருடத்தில் 5,39,958 ஆகக் குறையும். இது 2015ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குக் குடியேறிய மக்களின் எண்ணிக்கையின் (1,051,031) 50 சதவீத வித்தியாசமாகும்.
டைவர்சிட்டி விசா லாட்டரி மேலும் Diversity visa lottery பரிவில் ஒவ்வொரு வருடமும் 50,000 விசாக்களை அளிப்பதையும் RAISE சட்டம் மூலம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என டாம் காட்டன் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்குச் சோதனை காலம்.. எச்-1பி விசா, எல்1 விசா மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், கிரீன்கார்டு பெறுவதில் கூட RAISE சட்டத்தின் மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
goodreturns.in
- See more at: http://www.canadamirror.com/canada/80441.html#sthash.IH9hPqBE.QCKHEb65.dpuf
Geen opmerkingen:
Een reactie posten