தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 februari 2017

இலங்கை இராணுவத்தின் மனிதாபிமானம் கூட அரசியல்வாதிகளிடம் இல்லை!ஆதாரம் இதோ!

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன வெளியிட்ட கருத்தினை இந்திய ஊடகம் இன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜதந்திரியான பீட்டர் கல்ப்ரேனினால் வெளியிட்டப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தை தமிழீழ விடுதலை புலிகளிடம் இருந்து காப்பாற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
எனினும் சிவில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என கூறி இராணுவத்தினர் இந்த சந்தர்ப்பத்தில் அந்த உத்தரவினை கைவிட்டுள்ளதாக பீட்டர் கல்ப்ரேன் தனது ஆவணங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தன்னிடம் கூறிய விடயங்களை அடிப்படையாக கொண்டே பீட்டர் கல்ப்ரேன் அந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். அப்போது நாட்டில் காணப்பட்ட நிலைமை தொடர்பில் ஜே.ஆர்.ஜயவரன இந்தியாவிற்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியுள்ளதாக பீட்டரின் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்புவது என்றால் இலங்கையில் தமிழ் மொழியை பிரதான மொழியாக மாற்ற வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளதாக, ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவித்துள்ளார் என பீட்டர் கல்ப்ரேன் தனது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/politics/01/134438

Geen opmerkingen:

Een reactie posten