ஆனால் இதற்கு எதிர்மாறாக கனடாவின் பிரதமர் Justin Trudeau சிரியாவில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் நடைபெறும் போரால் பாதிக்கப்படும் மக்களுக்கு தனது நாட்டில் அடைக்கலம் தருகிறார்.
கடந்த வருடம் சிரியாவிலிருந்து கனடாவுக்கு வந்த அகதிகளை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார் Justin.
சிரியாவின் அலப்போவிலிருந்து கனடா வந்த Vanig Garabedian என்ற நபரும் அவர் குடும்பத்தினரும் கூறுகையில், பிரதமர் எங்களை புன்முறுவலோடு வரவேற்றார்.
மேலும் அவர் உணர்ச்சிவசமாக காணப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சிரியாவில் போர் நடக்கும் முன்னர் சந்தோஷமாக இருந்தோம், போர் நடக்கும் போது தான் பெரும் துன்பத்துக்கு ஆளானோம்.
கனடா பிரஜையாகவும், சிரியா பிரஜையாகவும் இருக்க நாங்கள் பெருமை படுகிறோம் என அந்த குடும்பம் கூறியுள்ளது.
இந்த சமயத்தில் கனடா பிரதமர் Justin, கண்களில் கண்ணீர் ததும்ப கனடா நாட்டு மக்கள் சார்பாக இங்கு எல்லோரையும் வரவேற்பது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
நீங்கள் எல்லோரும் என்னை நோக்கி வருவது என்னால் மற்ற நாடுகளுக்கு நன்றாக உதவ முடியும் என்ற உத்வேகத்தை தருவதாக அவர் உணர்ச்சி பொங்க பேசினார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
Geen opmerkingen:
Een reactie posten