தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 februari 2017

கனடாவிற்கு தஞ்சம் கோரி வந்த அகதிகள் அமெரிக்க எல்லை அதிகாரிகளால் திருப்பி அனுப்ப பட்டனர்

சோமாலிய நாட்டை சேர்ந்த அகதிகள் கடந்த செவ்வாய்கிழமை விடிகாலை வேளையில் நடந்து வந்து கனடாவிற்குள் நுழைய முயன்ற சமயம் அவர்களின் முயற்சி வெற்றியளிக்காது அமெரிக்க எல்லை அதிகாரிகளிடம் அகப்பட்டு கொண்டனர்.
இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் மூவரும் மனிரோபா எமசென் பகுதிக்கு அருகாமையில் வயல் வெளி ஒன்றின் ஊடாக கனடாவிற்குள் நுழைய முயன்ற சமயம் இச்சம்பவம் நடந்துள்ளதென சிபிசி செய்தி தெரிவிக்கின்றது.அமெரிக்க வட டெக்கோரா.பெம்பினா எல்லையில் நடந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் இதே வழியால் 22 அகதிகள் நடந்து வந்து மனிரோபாவை அடைந்துள்ளனர்.
அவசர சேவை பிரிவினர் மனிதர் ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். யு.எஸ்.எல்லையின்- யு.எஸ்.-கனடா எல்லையில்-  பாதுகாவலர்களால் பிடிபட்ட போது அவர்களிடம் இருந்து தப்பியோடிய சமயம் பிடிபட்டுள்ளார்.
இச்சம்பவம் நடந்த போது மிக கடுமையான குளிராக இருந்ததாக யு.எஸ்.சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர் எல்லையை கடக்க முயன்ற போது இவருடன் சேர்ந்த மற்றவரகள் உள்ஊர் எரிவாயு நிலையம் ஒன்றிற்குள் காத்திருந்துள்ளனர். எல்லையை கடக்கும் வரை இவர்கள் பொறுத்திருந்ததாக கூறப்படுகின்றது.
பிடிபட்டவர் நடுங்கிய வாறு காணப்பட்டார். வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. மாரடைப்பு வந்து விட்டதோ என அதிகாரி நினைத்துள்ளார்.
பின்னர் ஒருவர் அகதி கோரிக்கையாளர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
மூன்று சோமாலியர்களிற்கும் காலை சிற்றுண்டியும் தேநீரும் வழங்கினர்.இவர்கள் மினியாபொலிசை சேர்ந்தவர்கள். கனடாவிற்குள் செல்லும் நோக்கத்துடன் புறப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களை சிறையில் அடைக்க வேண்டாம் என இவர்களை காப்பாற்றியவர் ஷெரிப்பிடம் கேட்டு கொண்டதாக கூறப்பட்டது.
நூற்று கணக்கான அகதி கோரிக்கையாளர்கள் இமெர்சன் எல்லைக்கு ஊடாக வயல் வெளிகளில் நடந்து கனடாவிற்குள் வந்ததாக சிபிசி ஜனவரி மாதம் முதல் அறிக்கை விட்டிருந்ததாக அறியப்படுகின்றது.
இவர்களில் கானாவை சேர்ந்த இரு அகதிகள் தோலுறைவு நோயினால் பாதிக்கப்பட்டு வினிபெக்கில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து இப்பிரச்சனை பொது மக்கள் கவனத்தை ஈர்த்தது. கிறிஸ்மஸ் முதல் தினத்தில் கனடா-யு.எஸ்.எல்லைக்கு அருகில் நெடுஞ்சாலை 75ல் இச்சம்பவம் இடம்பெற்றது.
கடுமையாக பாதிக்கப்பட்ட அகதிகள் கைவிரல்கள் மற்றும் கால்விரல்களை இழந்தனர்.
இரு மனிதர்களின் கதை பகிரங்கமானதை தொடர்ந்து தாய் ஒருவர் மற்றும் இரண்டு வயது பிள்ளை உட்பட டசின் கணக்கான அகதி கோரிக்கையாளர்கள் மனிரோபா எல்லையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்போக்கு சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததால் வியாழக்கிழமை உள்ஊர் நகர அதிகாரிகள், ஆர்சிஎம்பி மற்றும் எல்லை பாதுகாவலர்களிற்கிடையில் இமெர்சனில் ஒரு அவசர கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
back3backback1

- See more at: http://www.canadamirror.com/canada/80712.html#sthash.9kXsQYjn.zOFbgwPp.dpuf

Geen opmerkingen:

Een reactie posten