நல்லுாரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் மன்னாரில் இருந்து வந்த தனஞ்சயன் மற்றும் நிசா என்ற இருவருமே முக்கிய நபர்களாக செயல்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவர்கள் இருவரும் தேவா மற்றும் பிரசாத் ஆகியோரின் கூட்டாளிகள் எனவும் தெரியவருகின்றது. தேவா மற்றும் பிரசாத் ஆகியோர் ஆவா குறுப் எனக் கூறப்படும் குழுவில் செயற்பட்டு பல கொலைகள் மற்றும் வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதும்.
பல முக்கிய வழக்குகளில் இவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறித்த இருவரும் மன்னாரில் தற்போது பதுங்கியிருந்து இந்தியா செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
தேவா மற்றும் பிரசாத் ஆகியோரின் கட்டளைகளுக்கு அமைவாகவே மன்னாரில் இருந்து வந்த தனஞ்சயன் மற்றும் நிசா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்த தமது கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு அரசடிப்பகுதியில் வாள் வெட்டுச் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுவில் முக்கிய உறுப்பினராக முன்னர் இருந்த பிரசன்னா என்பவன் மன்னாரில் இருந்து கள்ளப் படகு மூலம் இந்தியா சென்று தற்போது அங்கிருந்து சுவிஸ் நாட்டுக்குச் சென்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருத்தரின் புகைப்படம் தற்போது வெளியிடப் பட்டுள்ளது விரைவில் ஏனையவர் புகைப் படங்களும் கட்டம் கட்டமாக வெளியிடப்படும்….
http://www.jvpnews.com/srilanka/215331.html
http://www.tamilwin.com/community/01/134084
யாழ்ப்பாணம் நல்லுாரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் மன்னாரில் இருந்து வந்த இரண்டு இளைஞர்கள் முக்கிய சந்தேகநபர்களாக தொழிற்பட்டு வருவதாக புதிய தகவல் ஒன்று தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
யாழை தற்போது ஆட்டிப்படைக்கும் ஆவா குழுவில் இருந்து பல கொலைகள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய நபரின் நெருங்கிய நண்பர்களே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த முக்கிய நபர் பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் எனவும் தற்போது மன்னாரில் தலைமறைவாக இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
அத்துடன் மேற்கூறிய சந்தேகநபர் மற்றும் வேறு ஒருவருடைய கட்டளைக்கு அமைவாக மன்னாரில் இருந்து வந்த இரண்டு இளைஞர்களும், யாழ்ப்பாணத்தில் சில ரவுடிகளை சேர்த்துக்கொண்டு அரசடிப்பகுதியில் வாள் வெட்டுச் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், ஆவா குழுவின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய வேறு சந்தேகநபர் ஒருவர் மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியா சென்று தற்போது சுவிஸ் நாட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுக்கு பின்னர் சில இளைஞர்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தற்போது புகைப்படத்துடன் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு இளைஞனின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten