தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 februari 2017

கொடூரமாக கொல்லப்பட்ட நந்தினி! வளர்ப்பு சரியில்லை என கூறிய நிர்மலா பெரியசாமி

காதல் என்ற பெயரில் காமத்துக்கு இரையாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பெண் நந்தினி. புழுக்கள் நெளிய கண்டெடுக்கப்பட்டது அவர் உடல்.
இந்து முன்னணி நிர்வாகி, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். நந்தினியின் படுகொலைக்கு நீதி கோரி பலதரப்பட்ட மக்களுக்கும் பேசி வரும் நிலையில், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிர்மலா பெரியசாமி, 'நந்தினி விஷயத்தில் அவர் பெற்றோர் வளர்ப்பு சரியாக இருந்திருக்க வேண்டும்' என்று சொல்ல, அது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.
நிர்மலா பெரியசாமியைத் தொடர்புகொண்டோம். ''நீங்க நான் பேசினதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?'' என்கிற கேள்வியோடு பேச்சை ஆரம்பித்தார்.
'இத்தனை வருட அரசியல் மாற்றங்களில் ஜாதி மறைந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக பண பலத்தால், அதிகார பலத்தால் அது தூண்டிவிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஜாதியற்ற சமூகத்துக்கான மாற்றம் ஒவ்வொருவரின் வீட்டில் இருந்தும் ஆரம்பிக்க வேண்டும். முதலில் நாம் மாற வேண்டும்.
என் எண்ணங்களை சீர்திருத்தாமல் நான் சமுதாயத்தை சீர்திருத்தமுடியாது. நான் கடைப்பிடிக்கின்ற கொள்கைகளை மட்டுமே ஊடகங்களிலும் பேசுகிறேன். நந்தினி விஷயத்தில் குற்றாவாளிக்கான தண்டனை மிக மிகக் கடுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
அந்தச் சிறுமிக்கு நடந்த கொடுமைகளைப் படித்தபோது, தாங்கமுடியாமல் கண்களை மூடிக்கொண்டேன். எத்தனை வலி, வேதனையை நந்தினி அனுபவித்திருப்பாள்? எவ்வளவு கொடூர மனம் படைத்திருந்தால் அந்தக் குற்றவாளியால் அவள் கருவை இப்படிச் சிதைத்திருக்க முடியும்?
இந்தக் கொலையாளிக்கு தூக்கு தண்டனை, அதுவும் உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று, ஒரு பெண்ணாக என் மனம் பதைபதைக்கிறது, ஆவேசமாகிறது.
இன்னொரு புறம், தன் மகளுக்கான அக்கறையில் நந்தினி பெற்றோரின் அலட்சியம் குறித்தும் ஒரு பெண்ணாக என் பார்வையைப் பதிவு செய்கிறேன். தன் 16 வயதுப் பெண், சில வீடுகளே உள்ள அந்தக் கிராமத்தில் ஒருவரைக் காதலித்ததும், அது கர்ப்பம் வரை சென்றதும்கூடத் தெரியாத அளவுக்கு நந்தியின் பெற்றோர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.
முதலில், நம் பிள்ளைகளுக்கான பாதுகாப்புக்கு நாம் உரியன செய்ய வேண்டும். அவர்கள் தீவழி செல்லாமல் கண்காணிக்க வேண்டும். குடும்பம் என்ற அமைப்புக்குள் தவறுகள் முளையிலேயே கண்டிக்கப்படும்போதுதான், சமூகக் குற்றங்களைத் தடுக்க முடியும்.
இரவு 12 மணிக்கு பேருந்திலோ, ரயிலிலோ பெண்கள் தாராளமாக தனியாக பயணிக்கலாம் என்பதுதான் என் கருத்து. ஆனால், பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு பயணிக்க வேண்டும். உடனே, 'ஆபத்து எப்போது வரும் என்று எப்படித் தெரியும்?' என்று கேட்டால், என்ன சொல்ல? அதுதான் நம் நாட்டின் நிதர்சன சூழல்.
அப்படியிருக்க, பெண்கள் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 16 வயதில் ஒரு சிறுமியை கர்ப்பம், கொலை வரை இழுத்துச் சென்றிருக்கும் ஆபத்தான ஆண்களின் உலகம் இது.
'பெண்ணாசை, மண்ணாசை ஒழித்தால்தான் ஞானம் பெற முடியும்' என்கிறது நம்முடைய வேதம். 'பெண்ணும் மண்ணும் ஒன்றா?' என்று நான் பலமுறை கேள்வி எழுப்பியிருக்கிறேன்.
அப்படிப்பட்ட நிலையில் இருந்து இன்று முன்னேறியிருக்கிறோம். ஆனால் பெண்களுக்கான நிலை இன்றும் மாறவில்லை.
நான் தனியாக 14 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். எனக்கான பாதுகாப்பு வளையத்தை நிறுவும் தைரியம் எனக்கு இருந்தது.
அந்தத் தைரியம் இருக்கும் பெண்கள், முன்னோக்கி நடை போடுங்கள். அந்த மன உறுதி இல்லாத பெண்கள், துணையோடு செல்லுங்கள் என்று சொல்வதில் என்ன தப்பு சொல்லுங்கள்?''
- Vikatan
http://news.lankasri.com/india/03/118997?ref=lankasritop

Geen opmerkingen:

Een reactie posten