தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 februari 2017

குடியேறிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுவிஸ்: புதிய திட்டம் தொடக்கம்

சுவிட்சர்லாந்தில் குடியேறிகளுக்கான புதிய அதிரடி திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியேறிகளுக்கு உதவும் வகையில் பெர்னில் உள்ள குடியேறிகளுக்கான மையமே புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த தன்னார்வத் திட்டத்தின் மூலம் குடியேறிகளுக்கு சைக்கிள் சீரமைப்பு, சலவை செய்தல், காய்கறிகள் வளர்ப்பது, தேனீ வளர்ப்பு போன்ற திறன்களை கற்க பயிற்சியளிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி சமையல், தச்சுத்தொழில், தோட்ட மையம் அல்லது கட்டடம் கட்டுதல் போன்ற பயிற்சிகளும் குடியேறிகளுக்கான மையத்திலே அளிக்கப்படுகிறது.
குடியேறிகள் உள்ளுர் மொழியை கற்று, தனித் திறன்களை வளர்த்து சுவிஸில் வேலை கிடைக்கும் நோக்கத்திலே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அவர்கள் சொந்த நாடு திரும்பினால் அவர்கள் சொந்த உழைப்பில் ஈட்டிய வருமானத்தில் எந்தவித பிரச்னையும் இன்றி வாழ்க்கையை தொடர வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இதில் பங்கேற்கும் நபர்களுக்கு அவர்களது புதிய திறனை பாராட்டும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும். மேலும், பயிற்சி பெறும் ஒவ்வொரு நாட்களுக்கும் சிறிய தொகை வழங்கப்படுகிறது.
பெர்ன் குடியேறிகளுக்கான மையத்திற்கு வருகை தந்த நீதி அமைச்சர் Simonetta Sommaruga இந்த திட்டத்தை பாராட்டியுள்ளார். இது நமது நாட்டிற்கும், குடியேறிகளுக்கும் ஒரு நல்ல விஷயம் என குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten