தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 februari 2017

அகதிகள் விடயத்தில் கனடா அதிரடி முடிவு

அமெரிக்காவிலிருந்து தஞ்சம் தேடி வரும் அகதிகள் கனடாவுக்குள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள் என கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் வரக்கூடாது என அறிவி த்தார்.
டிரம்ப் உத்தரவுக்கு பயந்து அமெரிக்காவில் இருக்கும் பல அகதிகள் கனடாவுக்கு தற்போது அதிகளவில் வர ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், அகதிகள் கனடாவுக்குள் வரலாம் அதே நேரத்தில் கனடாவின் பாதுகாப்பு இன்னும் அதிகப்படுத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவின் எல்லையிலும் பொலிசார் பாதுகாப்பு தற்போது அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை இஸ்லாமிய Yazidi சமூகத்தை சேர்ந்த 400 அகதிகளை நாட்டில் அனுமதித்துளோம் எனவும் இந்த ஆண்டுக்குள் மேலும் 800 அகதிகளை வரவேற்கவுள்ளோம் எனவும் கனடா அரசு கூறியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten