வட பகுதியை சேர்ந்த இளைஞர், யுவதிகளை பிரித்தானியாவுக்கு அனுப்பும் பாரிய மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடபகுதியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் உள்ள இலங்கையின் சிரேஷ்ட சட்டத்தரணியினால் இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தினால் மரண அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிடப்படும் கடிதம் மூலம் அந்த தமிழர்களை பிரித்தானியா அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த அரசியல்வாதியினால் வெளியிடப்பட்ட கடிதத்தை தான் கண்டுபிடித்து விட்டதாக இலங்கை சட்டத்தரணி நேற்று குறித்த சிங்கள ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு மாத்திரம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை 833 ஆகும்.
வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் குறித்த அரசியல்வாதி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/community/01/180065?ref=rightsidebar-lankasrinews
Geen opmerkingen:
Een reactie posten