தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 april 2018

இலங்கை அதிரடி படையினரின் அட்டகாசத்தை அம்பலப்படுத்திய ஜஸ்மின் சூகா


இலங்கை சிறப்பு அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் மற்றுமொரு அறிக்கையில் வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையை ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ளது.
நீதிக்குப் புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படை மூத்த அதிகாரி ஒருவர், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 50இற்கும் மேற்பட்டோரின் விபரங்களை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவர்கள் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல், ஐ.நா அமைதிப் படை நடவடிக்கைத் திணைக்களம், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.
2006-2007 காலப் பகுதியில், தமிழர்களை படுகொலை செய்யுமாறு உத்தரவிட்ட சிறப்பு அதிரடிப்படை அதிகாரி ஒருவர், தற்போது, ஆபிரிக்க நாடு ஒன்றில், ஐ.நா அமைதிப்படையில் கண்காணிப்பாளராக பணியாற்றுவதாக, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் ஜஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களை ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்வதற்கான ஐ.நாவின் ஆய்வு முறைகளில் இன்னமும் குறைபாடுகள் இருப்பதையே இது காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையில், தமிழர்கள் கடத்தப்பட்டு சிறப்பு அதிரடிப்படையினரால் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டனர் என்பது பற்றிய, உள்ளக வாக்குமூலங்களும் இடம்பெற்றுள்ளன.

view-source:www.tamilwin.com/statements/01/181324?ref=ls_d_tamilwin

Geen opmerkingen:

Een reactie posten