11 வருடங்கள் எத்தியோப்பிய சிறையில் கழித்த பின் கனடா மண்ணில் கால் வைத்திருக்கிறார் ஒருவர்.
பஷீர் மக்தல் என்பவர் பிரிவினை வாத பயங்கரவாதக் குழுவின் ஒருவராக இருப்பதாக சந்தேகித்த எத்தியோப்பிய அரசு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது.
கனடா அதிகாரிகளின் பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு இவரை விடுதலை செய்திருக்கிறது எத்தியோப்பியா.
எத்தியோப்பியாவில் பிறந்து அகதியாக கனடாவிற்கு வந்த மக்தல் அங்கேயே குடியுரிமை பெற்று நிரந்தரமாக தங்கி விட்டார். சில காலம் கழித்து அங்கிருந்து வியாபார நிமித்தமாக கென்யா சென்ற மக்தல் அங்கு ஆடை வியாபாரம் செய்து வந்தார்.
2006ல் சோமாலியாவில் பணியாற்றிய இவர் எத்தியோப்பிய படைகளிடம் மாட்டிக்கொண்டார்.
மக்தலீன் தாத்தா எத்தியோப்பியாவில் பிரிவினைவாதக் குழுவான Ogaden தேசிய விடுதலை முன்னணியில் உறுப்பினராக இருந்ததால் அம்னோஸ்டி இன்டர்நேஷனல் என்கிற சட்ட விரோத நடவடிக்கைக்கும் மக்தலுக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகித்த எத்தியோப்பியா அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
அதன் பின் நாடு கடத்தப்பட்ட மக்தல் 2009ல் பயங்கரவாத தொடர்புடைய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டார். வெளியிலிருந்து யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மிகுந்த போராட்டங்களுக்கு இடையில் அவர் மீதான குற்றங்கள் நியாயமற்றது என்று அவர் வழக்கறிஞர் மற்றும் கனடா அதிகாரிகள் அவரை எத்தியோப்பிய சிறையிலிருந்து விடுதலை செய்தனர்.
ஒரு சகாப்தத்திற்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த பின் முதல் முறையாக பியர்சன் விமான நிலையத்தில் கால் வைத்த போது பஷீர் மக்தலின் கண்களிலிருந்து மட்டுமல்லாமல் அவரை வரவேற்க வந்த நெருங்கிய உறவுகளின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதில் ஒரு சிலர் அவர் சிறையில் இருக்கும்போது பிறந்தவர்கள் என்பதால் இப்போதுதான் முதல் முறையாக மக்தலை சந்திக்கின்றனர்.
11 வருட காலம் ஒருவர் தொடர்பிலும் இல்லாது பயங்கர தனிமையில் இருந்த மக்தல் அவர் உறவினர்களது அணைப்புடனே தனது வீட்டிற்கு சென்றார்.
சிறையில் இருந்த காலத்தில் தான் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தனக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டது எனவும் மக்தல் கூறியது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/canada/03/177053?ref=ls_d_canada
Geen opmerkingen:
Een reactie posten