தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 april 2018

இந்துக் கல்லூரியில் அட்டகாசம் செய்த முஸ்லிம் ஆசிரியை! அச்சுறுத்தல் விடுத்த கணவன்!


முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் பாடசாலைக்கு அபாயா அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.30 க்கு திருகோணமலை நகரில் அமைந்துள்ள சண்முகா இந்து மகளிர் கல்லூரி முன்பாக பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மாவட்ட இளைஞர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வாரம் பாடசாலைக்குள் அத்துமீறி முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் மற்றும் சம்பந்தமற்ற சிலர் பாடசாலை அதிபரை எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்துகொண்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் ஏற்கனவே மூன்று முஸ்லிம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் பாடசாலைக்குரிய சீருடையுடன் தமது மத விதிகளை மீறாமலும் ஸ்காப் அணிந்து வந்தனர்.
ஆனால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியை ஒருவர், தான் அபாயாவுடன் தான் வருவேன் என்று கூறியுள்ளார். பாடசாலை விதியை மீறி வந்தும் உள்ளார்.
இந்த நிலையில் பாடசாலைக்குள் உட்புகுந்த குறித்த முஸ்லிம் ஆசிரியையின் கணவன் ‘அவா அப்படி தான் வருவார். உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என அதிபரை மிரட்டியுள்ளார்.
அத்துடன் ஏனைய முஸ்லிம் ஆசிரியைகளையும் அபாயாவுடன் வர வைப்பேன் என்று பலருடன் சென்று மிரட்டியுள்ளார்.
இதனைவிட முஸ்லிம் ஆசிரியைகள் ஆரம்ப பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது தமிழ் மாணவர்களின் மொழி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொப்பியில் எழுதுங்கள் என்பதற்கு பதிலாக ‘கொப்பியில் கிறுக்குங்கள்’ என்றும் மாணவர்களுக்கு கூறியுள்ளதுடன், தமிழ் மாணவர்களிடம் வாப்பா, இருக்கி என்று பிறழ்வு அடைந்த மொழி பிரயோகத்தை திணித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் அரசியல் வட்டங்களில் இருந்தும் பாடசாலைக்கும் அதிக அழுத்தம் பிரயோக்கிப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.jvpnews.com/community/04/170281?ref=home-jvpnews

Geen opmerkingen:

Een reactie posten