இலங்கை உள்நாட்டு போரின் போது வட பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் நோக்கில் சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் வடக்கிற்கு சென்றுள்ளனர்.
கிளிநொச்சி கந்தசாமி கோயிலுக்கு அருகில் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதுடன், காணாமல் போனோர் தொடர்பில் கேட்டறிந்தனர்.
காணாமல் போனோர் இரண்டு பிரிவினர் உள்ளனர் என காணாமல் போனோரின் உறவினர்கள் சுவிஸ் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளனர்.
யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் ஒரு பகுதியினர், மற்றவர்கள் பாதுகாப்பு பிரிவினால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு பிரிவினால் சாட்சியின்றி கைது செய்யப்பட்ட அதிகளவானோர் தற்போது காணாமல் போயுள்ளனர். உயிரை பாதுகாத்து கொள்வதற்காக பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பலரும் காணாமல் போயுள்ளதாக அவர்கள் சுவிஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இது தொடர்பிலான தகவல்கள் ஆதாரத்துடன் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வடமாகாணத்தில் மாத்திரம் 22000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சுவிஸ் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
http://news.lankasri.com/swiss/03/176629?ref=ls_d_swiss
Geen opmerkingen:
Een reactie posten