தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 april 2018

உன் நாட்டுக்கு திரும்பி போ: மதுபோதையில் இளம்பெண் இனவெறி தாக்குதல்


பிரித்தானியாவில் இளம் பெண்ணொருவர் மது போதையில் கடைக்குள் சென்று ஊழியர்களிடம் இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாரொஷயரில் நடந்த இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில் குடி போதையில் இருந்த இளம் பெண்ணொருவர் சிக்கன் கடைக்குள் நுழைந்து அங்குள்ள ஊழியரிடம் உன் நாட்டுக்கே திரும்ப போ! அல்ஜீரியாவுக்கே திரும்ப போ, நீ எங்களுக்கு அவமானம் என கூறினார்.
மேலும், நாங்கள் பிரித்தானியாவில் பிறந்து இங்கேயே வளர்ந்தவர்கள் என கூறியடி இன்னொரு ஊழியரிடம் சென்று அவரிடமும் உன் சொந்த நாட்டுக்கு போ, நீ அவமானம் என கூறினார்.
வீடியோவை காண
இதை செய்யும் போது அவர்களை நோக்கி தொடந்து எச்சில் துப்பியபடியும் இருந்தார்.
இதையெல்லாம் அங்கிருக்கும் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில் போதை பெண்ணை உடனிருந்த அவரின் தோழி வலுக்கட்டாயமாக அங்கிருந்து கூட்டி சென்றார்.

http://news.lankasri.com/uk/03/175858?ref=home-section

Geen opmerkingen:

Een reactie posten