ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது பொலிசார் என்னை கடுமையாக தாக்கினர் என சின்னத்திரை நடிகை நிலானி கூறியுள்ளார்.
நிலானி கூறியதாவது, அண்ணாசாலை காவல் நிலையம் அருகே வரை போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் நாங்கள் நின்று அறவழியில் போராடிக் கொண்டிருந்தோம்.
அப்போது, அங்கு வந்த பொலிஸ் ஒருவர் எனது தோள்பட்டையில் கைவத்தார். அதை அருகில் இருந்தவர்கள் தட்டிகேட்டபோது, திடீரென பொலிசார் தடியடி நடத்தியதில் எல்லோரும் அங்கும் இங்கும் சிதறி ஒடினர்.
பொலிசார் தாக்கியதில் என் மீது சிலர் விழுந்தனர். இதனால் நானும் கீழே விழுந்தேன். அதில் எனக்கு கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன.
நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. தமிழன் என்ற உணர்வு அடிப்படையில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன்.
ஆனால், என்னிடம் பொலிசார் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது அது வன்முறை என்றே தெரிகிறது. நான் ஏற்கெனவே, ஐல்லிக்கட்டு, நீட் ஆகிய போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன் என கூறியுள்ளார்.
http://news.lankasri.com/india/03/176214?ref=ls_d_india
Geen opmerkingen:
Een reactie posten