தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 april 2018

கனடாவில் யாழ். இளைஞர்கள் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?


கனடாவின் தொடர் கொலையாளியால் கொல்லப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நேற்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தனது நண்பன் கிருஷ்ணகுமார் கனகரத்திணத்தின் மரணம் தொடர்பில் அவரது நண்பர் கோபி பத்மநாதன் கருத்து வெளியிட்டிருந்தார்.
இறுதியாக காணாமல் போன நேரத்தில் கிருஷ்ணகுமார் Kennedy, Ellesmere பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறும் போது கோபி அவரை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார்.
கடந்த 15 வருடங்களாக கோபி மற்றும் கிருஷ்ணகுமார் நண்பர்களாக இருந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் இருந்தே அவர்களின் நட்பு தொடர்ந்துள்ளது. அதே போல் இருவரும் 2010ஆம் ஆண்டு MV Sun கப்பல் மூலம் தாய்லாந்து வழியாக கனடாவை சென்றடைந்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு நாடு கடத்தலை எதிர்கொள்ளவிருந்த கிருஷ்ணகுமார் அதிலிருந்து தப்புவதற்கு முயற்சித்துள்ளார்.
அவரது பணி அனுமதி காலாவதியானது, அவரது அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டது மற்றும் மேல்முறையீடு மறுக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் தலைமறைவாக இருக்க முயற்சித்தார்.
இதனால் அறையை விட்டு செல்ல முயற்சித்தவரை கோபி தடுக்கவில்லை. தனது நண்பர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கோபி கடவுளை வேண்டி கொண்டுள்ளார்.
அதன் பின்னர் இரண்டு மாதங்களில் கிருஷ்ணகுமாருடான் தொடர்புடைய நண்பரை டொரொன்டோவில் கோபி சந்தித்துள்ளார். கிருஷ்ணகுமார், தாடி மற்றும் முடியை நீளமாக வளர்த்துள்ளார் என நண்பர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னரே அவர் Buce McArthur என்பவரினால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், கொல்லப்பட்டவரின் சடலம் தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Buce McArthur 8 கொலைகளுடன் தொடர்புடையவர்.
இதேவேளை MV Sun கப்பல் மூலம் கனடா சென்ற மற்றுமொரு பயணியான சுகந்தன் மகாதேவன் கருத்து வெளியடுகையில், தனது நண்பர் கிருஷ்ணகுமார் எங்காவது மறைந்திருப்பார் என்றே எண்ணினேன் என குறிப்பிட்டுள்ளார்.
“அவர் உயிரிழந்திருப்பார் என நாம் எதிர்பார்க்கவில்லை என சுகந்தன் மகாதேவன் மைத்துன் சுதர்ஷன் தணியாசலம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகுமார் மிகவும் மகிழ்ச்சியானவர்.
நன்கு பேச கூடியவர். அவரது அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதன் பின்னர் தொலைபேசி பாவனையை நிறுத்தி விட்டார் என தனிகாசலம் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் தொடர் கொலையாளியான Buce McArthur என்பவரினால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




http://news.lankasri.com/canada/03/177648?ref=ls_d_canada

Geen opmerkingen:

Een reactie posten