தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 april 2018

இலங்கையரை நாடு கடத்திய விடயத்தில் சிக்கலுக்குள்ளான கனேடிய அதிகாரி


கனடாவில் இருந்து இலங்கையர் ஒருவரை நாடு கடத்தும் விடயத்தில் கனேடிய பிராந்திய நீதிபதி ஒருவர், அந்நாட்டு குடிவரவு அதிகாரி ஒருவரை கண்டித்துள்ளார்.
கனடாவில் இருந்து இலங்கை தமிழர் ஒருவரை நாடு கடத்தவிருந்தபோது அவருக்கு இலங்கையில் ஏற்படவுள்ள ஆபத்து குறித்து உரிய மதிப்பீடுகள் மேற்கொள்ளவில்லை என்று கனேடிய நீதிபதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்
குறித்த இலங்கையர் நாடு கடத்தப்பட்டிருந்தால், அவர் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கலாம்.
அவரின் உயிர் ஆபத்து தொடர்பில் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், சமாதான நீதிவான் ஒருவரும் வழங்கியுள்ள கடிதத்தையும் கருத்திற்கொள்ளாது குடிவரவு அதிகாரி, இலங்கையரை நாடு கடத்த முயன்றுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்தே, குறித்த குடிவரவு அதிகாரியை கனேடிய நீதவான் கண்டித்துள்ளார் என அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

http://www.canadamirror.com/community/01/178626?ref=ls_d_canadamirror

Geen opmerkingen:

Een reactie posten