தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 juni 2016

தமிழீழம் எப்போது கிடைக்கும்? – பிரபாகரனின் பதில்

பிரபாகரன் அன்பானவர், பண்பானவர், மிகவும் பலம் வாய்ந்த  விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்துபவர் என்ற முறையில் , சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் இலட்சியத்தில் தீவிரமும் உறுதிப்பாடும் மிக்கவராக விளங்குகிறார் என 1984ல் அவரைச் சந்தித்து பேட்டி எடுத்த அனிதா பிரதாப் தெரிவித்தார் .
அனிதா கேட்ட சில கேள்விகளும் பிரபாகரன் அளித்த துல்லியமான பதில்களும்……..

1.கேள்வி: சிங்கள இராணுவத்தின் கரங்களில் பிடிபடுவதைவிட மரணமடைவது மேலானது என்று கருதுகிறீர்களா?
பதில்: உயிரோடு எதிரிகள் கைகளில் பிடிபடுவதை கெளரவமாக சாவதையே விரும்பிக்றேன்.
2. கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஏன்? அவர்களைத் துரோகிகள் என நினைக்கிறீர்களா?
பதில்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் சந்தர்ப்பவாத அரசியலானது விடுதலைப் போராட்டத்தை நிச்சயமாகப் பின்னுக்குத் தள்ளத்தான் செய்கிறது. இப்போராட்டத்தைமுன்னெடுத்துச் செல்ல திட்டவட்டமான நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் ஒருபோதும் எடுத்ததில்லை. மாறாக அவர்கள் பொய்யான நம்பிக்கைகளைத் தருகிறார்கள், பிரமைகளை ஏற்படுத்துகிறார்கள், எமது மக்களைத் தொடர்ந்து அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க முனைகிறார்கள். அவர்கள் தங்களது சுயநல அபிலாசைகளை அடையவே அரசியலில் நுழைந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வதர்கான உண்மையான நோக்கம் எதனையும் அவர்கள் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை.அத்தோடு எந்தவிதமான உருப்படியான அரசியல் வேலைத்திட்டத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த விடுதலைப் போராட்டச் சூறாவழியில் மாட்டிக்கொள்ளவில்லை. புரட்சியின் ஜூவாலை தமிழீழம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இதை அணைக்க அவர்கள் தங்களால் ஆன மட்டும் முயன்று பார்க்கிறார்கள். இந்த அர்த்தத்தில் அவர்களை துரோகிகள் என வர்ணிக்கலாம்.
3.கேள்வி: இலங்கை அரசாங்கத்தால் தேடப்படுவர்களில் முதன்மையானவராக இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: “பிரிட்டிஷ் அரசாங்கம் யாரைப் ‘பயங்கரவாதி’ என்று சொல்கிறதோ அவனே உண்மையான ஐரிஸ் தேசிய போராளி” என்று ஐரிஸ் தலைவர் ஒருவர்குறிப்பிட்டார். அதுபோல, இலங்கை அரசு என்னைத் தேடப்படுபவர்களில் முதன்மையானவராகத் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசியப் போராளியென்பதையே உணர்த்துகிறது. அவ்வாறு தேடப்படும் நபராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
4.கேள்வி: அமெரிக்காவிலிருந்து சிறீலங்காவிற்குப் பெருமளவில் ஆயுதங்களும், உபகரணங்களும் வந்து குவிவது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:
இந்த ஆயுதக் குவிப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கக்கூடியது. சிறீலங்கா இராணுவத்திற்கு உதவிசெய்து தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல என்பது உங்களுக்குத் தெரிந்ததே. திருகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை அமைத்துக்கொள்வது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கபட நோக்கம். இது இந்து சமுத்திரப் பகுதியை யுத்தப் பிராந்தியமாக மாற்றுவதுடன் இப்பிரதேசத்தில் யுத்த நெருக்கடியை உண்டுபண்ணும்.
5.கேள்வி: எப்படியோ ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ் வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்:
தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப் பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாகத் தமிழீழம் அமையும். இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேராக் கொள்கையைக் கடைபிடிக்கும். அத்தோடு இந்தியாவோடு நேச உறவு கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை, குறிப்பாக அந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கெளரவிக்கும்.
6.கேள்வி- உங்கள் வாழ்க்கையில் மிகுந்த விரக்தியைத் தந்த கணம் என்று எதையாவது கூறுவீர்களா?
பதில் – என் வாழ்க்கையில் அப்படி விரக்தி ஏற்பட்ட கணம் என்று எந்த ஒன்றையும் குறித்துச் சொல்ல முடியாது. இலட்சிய நோக்கு கொண்டவர்கள் என்று நான் நினைத்து நம்பிய சில நண்பர்கள் சுயநலச் சந்தர்ப்பவாதிகளாக மாறியபோது நான் மிகுந்த விரக்திக்குள்ளானதுண்டு.
7.கேள்வி: உங்கள் கணிப்பில் தமிழீழத்தை எப்போது அடைவீர்கள்?
பதில்:
விடுதலைப் போராட்டத்திற்கு கால வரையறையோ அல்லது ஒரு பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழீழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளை பொறுத்து இது அமையும்

 http://www.asrilanka.com/2016/06/28/32246#sthash.DYYimHqB.dpuf
http://www.asrilanka.com/2016/06/28/32246

Geen opmerkingen:

Een reactie posten