தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 juni 2016

பைபாஸ் திரைப்படம்

25 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜீவ்காந்தி படுகொலையின் போது மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ‘ஆய்வில் உள்ள, இதுவரை வெளிவராத,  அடிப்படை பிழைகளை ஆய்வு செய்கிறது இத்திரைப்படம்.
மருத்துவர்கள் டாக்டர் ரா. ரமேஷ் மற்றும் டாக்டர் புகழேந்தி அவர்கள்  பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் விளைவுதான் இந்த திரைப்படம்.
ஒரு வகையில் இது ஒரு பயணக் காவியம். பல ஆண்டுகளாக ஆய்வு செய்து பெறப்பட்ட உண்மையின் அழுத்தத்தை உலகிற்கு உரைப்பதற்கு சக பயணி ஒருவரோடு மேற்கொள்ளும் பயணத்தின் கதைதான் இந்த திரைக்காவியம். பல ஆண்டுகளாக, பல நல்ல நெஞ்சங்கள் திரட்டி தந்த அரிய ஆவணங்களிலிருந்து பிறப்பெடுத்திருக்கிருக்கும் ஒரு துளிதான் இத்திரைப் படம்.
இறுதியில், இதைப்போன்ற முக்கிய வழக்குகளில் சாட்சியங்களாக வரும் வல்லுநர்களின் வாக்குமூலத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு உலக நீதித் துறை உயர்த்திப்பிடிக்கும் டாபர் வரையறை மற்றும் கோட்பாட்டை (Daubert Standard) அமல்படுத்த வேண்டுமென இத்திரைப்படம் வாதிடுகிறது.
இத் திரைப்படம் வணிக நோக்கின்றி சமூக வலைத் தளங்களில் வெளியிடப்படுகிறது.  வணிக நோக்கமுமின்றி இந்த திரைப்படத்தை எவ்வித மாற்றமுமின்றி பதிவிறக்கம் செய்து யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விநியோகிப்பதற்கான பொது உரிமத்தை அனைவருக்கும் வழங்கும் இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் இது.

43 நாட்களில், 12 பேரைக் கொண்ட ஒரு குழுவால், ரூ.80 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட 2.45 மணி நேரம் நீளும் இந்தத் திரைப்படத்தில் திரைக்கதை – வசனம் இல்லை; படத்தின் இசை படக் குழுவினராலேயே உருவாக்கப்பட்டது; ஒலி களத்திலேயே பதியப்பட்டது; குழுவினரே படத்தினை எடிட் செய்தார்கள். வாகனம், உணவு போன்றவற்றிற்கே மேற்கூறிய செலவு செய்யப்பட்டது.

குழுவில் பங்கேற்ற அனைவரும் சம நிலையிலேயே செயல்பட்டனர். நிறுவனத் திரைப்படத் தயாரிப்பில் உள்ள படிநிலை அமைப்பு இங்கு இல்லை.

சாமாண்யர்களாலும் முழுநீளத் திரப்படங்களை உருவாக்க முடியும் என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்துள்ளது.

ஜீரோ பட்ஜெட் திரைப்படங்களுக்கு இது வழி வகுத்துள்ளது.

படத்தின் கதை குறித்து எழுப்பப் படும் அனைத்துக் கேள்விகளுக்கும் ஓளி-ஒலிப்படிமங்கள் மூலமாக, சமூக வலைத் தளங்களின் வழியாக பதில்களைக் கூறுவதற்கு படக்குழு உறுதி அளிக்கிறது.

படத்தைப் பின்வரும் இணைய தளங்களில் காணலாம்; பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம்:

HD TV Edition  :    https://youtu.be/xHyrBpaG_G8
1.4 GB Feather lite Edition :     https://youtu.be/0scdVuuWBp4
………………………………………………
விநியோகிப்பதற்கான பொது உரிமத்தை அனைவருக்கும் வழங்கும் இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் இது.
43 நாட்களில், 12 பேரைக் கொண்ட ஒரு குழுவால், ரூ.80 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட 2.45 மணி நேரம் நீளும் இந்தத் திரைப்படத்தில் திரைக்கதை – வசனம் இல்லை; படத்தின் இசை படக் குழுவினராலேயே உருவாக்கப்பட்டது; ஒலி களத்திலேயே பதியப்பட்டது; குழுவினரே படத்தினை எடிட் செய்தார்கள். வாகனம், உணவு போன்றவற்றிற்கே மேற்கூறிய செலவு செய்யப்பட்டது.
குழுவில் பங்கேற்ற அனைவரும் சம நிலையிலேயே செயல்பட்டனர். நிறுவனத் திரைப்படத் தயாரிப்பில் உள்ள படிநிலை அமைப்பு இங்கு இல்லை.
சாமாண்யர்களாலும் முழுநீளத் திரப்படங்களை உருவாக்க முடியும் என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்துள்ளது.
ஜீரோ பட்ஜெட் திரைப்படங்களுக்கு இது வழி வகுத்துள்ளது.
படத்தின் கதை – உண்மைச் சம்பவம் ஒன்றைப் பற்றியது. அது குறித்து எழுப்பப் படும் அனைத்துக் கேள்விகளுக்கும் ஓளி-ஒலிப்படிமங்கள் மூலமாக, சமூக வலைத் தளங்களின் வழியாக பதில்களைக் கூறுவதற்கு படக்குழு உறுதி அளிக்கிறது.
……………………..
“BYPASS” – A Film Re looking into the the Crime Scene of Rajiv’s Assasination – shocking revelations!
Here you  the Tamil film titled “Bypass” conceived by two socially concerned doctors, Dr.R. Ramesh and Dr.Pugazhendhi, critiquing on the Forensic Investigation, headed by Dr.P.Chandra Sekharan, on the Rajiv’s assassination, after 25 years!
The film unfolds certain vital omissions and commissions in the Forensic investigations of the Crime Scene, which is indeed surprising and rather shocking!
This is in a way a Travel Film wherein the protagonist undertakes a long journey with a fellow traveller as a means for his catharsis, wherein he shares the truth, as he understands, which emerged from his understanding of the scientific basis of the forensic investigation undertaken by Dr.Chandrasekhar.  The Film is only the quintessence of the volumes of materials collected by the duo doctors from various sources of well wishers across the country.
Finally the film demands the need  to invoke the Daubert Standard for admissibility of the testimony of expert witness, in order to uphold the truth and justice.
The film has been uploaded in the social media, as a non-commercial and perhaps as the first open source film in India.
We request the Press to take cognizance of the effort and render it in their esteemed media for the public cause.
The film is an humble endeavor of a totally a non-professional team of film enthusiasts with social commitment.
We look forward to your critical review of the film.
Youtube Page
HD TV Edition
1.4 GB Feather lite Edition :
Facebook Page
For a 3.5 GB HD Version send requests to:
……………………….
பைபாஸ் திரைப்படம் – ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை ஒட்டிய அதிர்ச்சி தகவல்கள்.
பைபாஸ் என்னும் பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் சமூக வலைத் தளங்களில் இன்று பகிரப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜீவ்காந்தி படுகொலையின் போது மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ‘ஆய்வில் உள்ள, இதுவரை வெளிவராத,  அடிப்படை பிழைகளை ஆய்வு செய்கிறது இத்திரைப்படம். மருத்துவர்கள் டாக்டர் ரா. ரமேஷ் மற்றும் டாக்டர் புகழேந்தி அவர்கள்  பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் விளைவுதான் இந்த திரைப்படம்.
ஒரு வகையில் இது ஒரு பயணக் காவியம். பல ஆண்டுகளாக ஆய்வு செய்து பெறப்பட்ட உண்மையின் அழுத்தத்தை உலகிற்கு உரைப்பதற்கு சக பயணி ஒருவரோடு மேற்கொள்ளும் பயணத்தின் கதைதான் இந்த திரைக்காவியம். பல ஆண்டுகளாக, பல நல்ல நெஞ்சங்கள் திரட்டி தந்த அரிய ஆவணங்களிலிருந்து பிறப்பெடுத்திருக்கிருக்கும் ஒரு துளிதான் இத்திரைப் படம்.
இறுதியில், இதைப்போன்ற முக்கிய வழக்குகளில் சாட்சியங்களாக வரும் வல்லுநர்களின் வாக்குமூலத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு உலக நீதித் துறை உயர்த்திப்பிடிக்கும் டாபர் வரையறை மற்றும் கோட்பாட்டை (Daubert Standard) அமல்படுத்த வேண்டுமென இத்திரைப்படம் வாதிடுகிறது.
இத் திரைப்படம் வணிக நோக்கின்றி சமூக வலைத் தளங்களில் வெளியிடப்படுகிறது.  வணிக நோக்கமுமின்றி இந்த திரைப்படத்தை எவ்வித மாற்றமுமின்றி பதிவிறக்கம் செய்து யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொழிற்முறை திரைப்பட வல்லுநர்கள் இல்லாமல் சமூக அக்கறைக் கொண்ட திரை ஆர்வலர்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே உருவாகியுள்ள இந்த திரைக் காவியத்தை ஊக்கப்படுத்தும் முகமாக இத் திரைப்படம் பற்றிய செய்தியினை சமூக நலன் கருதி தங்களின் மேலான ஊடகத்தில் வெளியிட்டு உதவவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தங்களின் காத்திரமான திரை விமர்சனத்திற்காக காத்திருக்கிறோம்.
திரைப்படத்தைப் பதிவிறக்கம் செய்யப் பின்வரும் இணைப்புகளை சொடுக்குங்கள்:
Youtube Page
HD TV Edition
1.4 GB Feather lite Edition :
Facebook Page
For a 3.5 GB HD Version send requests to:

Geen opmerkingen:

Een reactie posten