தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 17 juni 2016

கனடாநாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு தரவுகள் சேகரிக்கப்படும்.

நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கடவுச்சீட்டு தரவுகளை சேகரிக்கும் முயற்சியை கனடா ஆரம்பிக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் றலவ் குட்டேல் அறிவித்துள்ளார்.
கடவுச் சீட்டின் இரண்டாம் பக்கத்தில் இடமபெறும் முழுப்பெயர், தேசிய இனம், வழங்கும் அதிகாரிகள் மற்றும் பயணிகளின் பால் போன்றன இவற்றில் அடங்கும்.
கனடாவிற்குள் நுழைபவர்களின் தரவுகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுவிட்டன.
சேகரிக்கப்படும் இத்தகவல்கள் அம்பர் எச்சரிக்கைக்கு-காணாமல் போகும் குழந்தைகளின் விடயத்தில் சிறந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மனித கடத்தல்களை சமாளிக்க உதவும் என அமைச்சர் குட்டேல் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் பயணிப்பதையும் தடுக்க உதவுவதோடு விசா விண்ணப்பங்கள மற்றும் குடிவரவு நடைமுறைகள் போன்றனவற்றை சமாளிக்க குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலுமிற்கும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமன்றி கனடிய சமூகத்திட்ட ஒருமைப்பாட்டை உறுதிசெய்யவும் உதவுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவை விட்டு தரைமார்க்கமாக வெளியேறும் போது அமெரிக்க எல்லைப்புற அதிகாரிகள் குறிப்பிட்ட தரவுகளை சேகரித்து கனடிய அதிகாரிகளிற்கு அனுப்பிவைப்பர்.
விமான மூலம் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் தரவுகளை எயர்லைன்ஸ் கனடிய எல்லைகள் சேவை அதிகாரிகளிற்கு தெரிவிப்பார்கள். சகல விபரங்களும் 15 வருடங்களிற்கு வைத்திருக்கப்படும்.
சர்வதேச பாதுகாப்பை அதிகரிக்கும் இத்திட்டம் மில்லியன்கணக்கான மக்கள் வரிப்பணத்தை ஏமாற்றுவதை தடுக்கவும்,  மில்லின் கணக்கான டொலர்கள் அரச வேலைவாய்ப்பு நன்மை கொடுப்பனவுகளை நாட்டிற்கு வெளியே இருந்து கொண்டு சட்ட விரோதமாக பெறுவதனைதடுக்கவும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இத்திட்டம் முழுமையாக செயல் படுத்தப்படும் பட்சத்தில்  மூலம் கனடிய றெவனியு ஏஜன்சி மற்றும் வேலைவாய்ப்பு சமூக அபிவிருத்தி கனடா, டொலர்கள் 194மில்லியன்கள் தொடக்கம் 319மில்லியன் டொலர்கள் வரை சேமிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
pass

- See more at: http://www.canadamirror.com/canada/64415.html#sthash.TGy6UNVS.dpuf

Geen opmerkingen:

Een reactie posten