தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 17 juni 2016

அகதிகள் படகை இந்தியா நோக்கி அனுப்ப தயாராகிறது இந்தோனேசியா!

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரை தட்டியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை இந்தோனேசிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தேவையான எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றி இந்தப் படகின் இயந்திரத்தை இயங்க வைத்து, இந்தியா நோக்கி அனுப்பி வைப்பதற்கு இந்தோனேசியா முடிவு செய்துள்ளது.
இன்று அகதிகள் படகில் இருந்தவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.அதேவேளை, படகில் இருந்த அகதிகள் தனித்தனியாக குடிவரவு அதிகாரிகளால் படம்பிடிக்கப்பட்டனர்.
இந்தோனேசியக் கடற்படைக் கப்பல் ஒன்று இந்த அகதிகள் படகை பாதுகாப்பாக இந்தியா நோக்கி கொண்டு செல்லவுள்ளது.
இதற்காக இந்தோனேசிய கடற்படைக் கப்பல் ஒன்று அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் இழுவைப் படகு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா நோக்கி பயணிப்பது சாத்தியமில்லை என்றும் எனவே மீண்டும் இந்தியாவுக்கே திரும்புமாறு அகதிகளிடம் கூறியிருப்பதாகவும், இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று இந்தப் படகை அனைத்துலக கடற்பரப்புக்கு இழுத்துச் செல்வதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் இந்தோனேசிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten