தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 juni 2016

யாழில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பிரித்தானிய பிரஜை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு

தமது திருமணத்துக்காக வந்திருந்த பிரித்தானிய பிரஜை சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த சித்திரவதை சம்பவம் தொடர்பில் வடக்கின் முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரன், நேற்று தம்மை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமும் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மெய்ல் இணையம் இந்த செய்தியைவெளியிட்டுள்ளது.
36 வயதான வேலாயுதப்பிள்ளை ரேணுகருபன் என்பவர் இந்த மாதம் முதலாம் திகதி ( ஜூன்1)யாழ்ப்பாணத்தில் உள்ள தமது வீட்டுக்கு சென்றிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்திய பின்னர் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு அழைத்துசென்று தடுத்துவைத்துள்ளனர்.
ரேணுகருபனுக்கு பேசிமுடித்த திருமணம் ஜூன் 8ஆம் திகதியன்று நடைபெறவிருந்தது.இதனையடுத்து மனைவியுடன் ஜூன் 23 ஆம் திகதியன்று அவர் லண்டனுக்கு புறப்பட்டு செல்லதயாராகியிருந்தார்.
இந்தநிலையில், அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, லண்டனில் இருந்து தாயகத்துக்கு திரும்புவோர் துரோகிகளாக பார்க்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதராக டெய்லி மெயிலுக்கு கருத்துரைத்த மனித உரிமைகள்ஆர்வலர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten