வேலுப்பிள்ளை செல்வநாயகத்துடன் இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டு இருந்தால் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரங்குக்குள் வந்து இருக்க மாட்டார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்ட முன் மொழிவு 24.05.16 செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவைக் கட்டடத்தில் வைத்து யாழ்.ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்பட்டது. அந்நிகழ்வை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலையே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. அவர்கள் இறைமையுடன் வாழ்ந்த மக்கள். எனவே அவர்கள் தொடர்ந்து சுயநிர்ணய உரிமையுடன் வாழ சமஷ்டியை கோருகின்றார்கள். ஒரு நாட்டுக்குள் தீர்வினை கோருகின்றார்கள்.
சமஷ்டி கோரிக்கையை முதல் முதலாக முன் வைத்தவர்கள் சிங்கள தலைவர்களே. இலங்கையில் சமஷ்டியை உருவாக்க யோசித்த போது இ கண்டிய சிங்கள தலைவர்கள் வடக்குஇ கிழக்கு ஒரு பிராந்தியமாகவும் இ மத்தி ஒரு பிராந்தியமாகவும் இ மற்றும் கரையோரம் ஒரு பிராந்தியமாகவும் இ பிரித்து மூன்று சமஷ்டி பிராந்தியத்தை உருவாக்க யோசனையை முன் வைத்தார்கள். அந்த யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தால் இ 1930ம் ஆண்டுக்குள் இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டி இருக்கும்.
அதன் பின்னர் 1949ம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவாக்கிய பின்னர் தந்தை செல்வநாயகத்தால் இ உத்தியோகபூர்வமாக சமஷ்டி கோரிக்கை முன் வைக்கப்பட்டது. எங்கள் தாயகம் பிரிக்க முடியாதது. உலகில் இல்லாத ஒன்றினை நாங்கள் கோரவில்லை. எனவே இந்த தீர்வினை இனவாத ரீதியாக பார்த்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராகவோ இ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கருத்துக்களை முன் வைக்காது. தீர்வினை எட்ட வேண்டும்.
சாமூவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுடன் இந்த பிரச்சனை தீர்க்க பட்டு இருந்தால் இ வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்த அரங்குக்குள் வந்து இருக்க மாட்டார். தற்போது மீண்டும் ஒரு சந்தர்ப்பம் சி.வி.விக்னேஸ்வரன் காலத்தில் வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்திலும் தீர்வு எட்டபப்டாது விடின் பாரிய விளைவுகள் ஏற்படலாம். ஆயுத போராட்டம் மௌனித்து உள்ளது. இந்நிலையில் அடக்கு முறைகள் தொடரும் ஆயின் அதனால் எதிர்காலத்தில் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதனை கடந்த கால வரலாறுகளில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
வடமாகாண சபை சிங்கள உறுப்பினர்கள் சிங்கள பேரினவாதத்திற்கு அஞ்சுகின்றார்களா ? உண்மை கண்டறியப்படாமல் தேசிய நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார். வடக்கு மாகாண சபை தீர்வுத்திட்ட முன் மொழிவு ஊடகவியலாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கைதடியில் உள்ள வடமாகாண சபையின் பேரவைக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அந்நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தேசிய நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும் ஆயின் முதலில் போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப் பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். உண்மைகள் கண்டறியப்பட்டாலே தேசிய நல்லிணக்கம் உருவாக முடியும். வடமாகாண சபையில் உள்ள இரண்டு சிங்கள உறுப்பினர்கள் கூட சிங்கள பேரினவாதத்திற்கு அஞ்சுகின்றார்களா ? என எண்ண தோன்றுகின்றது.
ஏனெனில் வடமாகாண சபையினால் முன் வைக்கப்பட்ட தீர்வு திட்டத்தில் கோரப்பட்ட சமஸ்டி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதனை தாங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த இரு சிங்கள வடமாகாண சபை உறுப்பினர்களும் தெரிவித்து உள்ளனர். அதனால் அந்த இரு உறுப்பினர்கள் சிங்கள பேரினவாதத்திற்கு அஞ்சியே அவ்வாறு சமஸ்டி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறியுள்ளனர் என எண்ணுகின்றேன் என தெரிவித்தார்.
http://www.asrilanka.com/2016/06/05/32160
http://www.asrilanka.com/2016/05/30/32134#sthash.XCvhsTi2.dpuf
Geen opmerkingen:
Een reactie posten