தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 juni 2016

படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பல நாடுகளில் தஞ்சம்

இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் பல்வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்றில் வெளிவந்துள்ள இது தொடர்பான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகளில் பணியாற்றிய 54 முக்கியஸ்தர்கள் நான்கு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் முக்கியஸ்தரான யஸ்மின் சூக்கா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய படையணிகளான சோதியா, ராதா, இம்ரான் பாண்டியன் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த முக்கியஸ்தர்களே இவ்வாறு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர்.
பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளே இவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளன.
இறுதிப் போரின் போது படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட குறித்த முக்கியஸ்தர்கள் உயிருடன் இருப்பதாக தெரிய வந்துள்ளமை ஒரு திருப்புமுனைத்தகவலாக கருதப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten