மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் 43 பேரிடம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பால் வழங்கப்படும் அடையாள அட்டை இருந்துள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணம் செய்த 131 இலங்கையர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
Etra என்ற எண்ணெய் கப்பலின் மூலம் 131 இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பயணித்துள்ளனர்.
இவர்களில் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் 7 சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
131 பேரில், 127 பேர் இலங்கையர்கள் என்றும், 4 பேர் ஏஜெண்டுகள் எனவும் தெரியவந்துள்ளது. இதில் 127 இலங்கையர்கள் சட்டவிரோத குடியேற்றம் 1956/63 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சிய ஏஜெண்டுகள் 4 பேர் ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையர்களின் கைது குறித்து மலேசியாவில் உள்ள இலங்கை high Commission விசாரணை நடத்தி வருகிறது.
கைது செய்யப்பட்ட 131 பேரும் தற்போது மலேசிய அரசின் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 43 பேரிடம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பால் வழங்கப்படும் அடையாள அட்டை இருந்துள்ளது என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
http://news.lankasri.com/malaysia/03/178193?ref=ls_d_world
Geen opmerkingen:
Een reactie posten