தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்கும் விடுதலைக்குமான உலகத்தமிழ் மாநாடு இம்முறை கனடாவில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இது குறித்த நிகழ்வுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் ஏழாம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கனடிய தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து, உலகமெங்கும் பரவி வாழும் தமிழினத்தின் ஒருமித்த குரலாக, ஒட்டாவாவில் பல்நாட்டு அறிவு சார்ந்தோர் பங்கெடுக்கும் நிகழ்வில் ஒவ்வொரு தமிழனும் இணைந்து கொள்வது எங்கள் வரலாற்றுக் கடமையாகும்.
எமது உறவுகள் ஆயிரம் ஆயிரமாக 2009ம் ஆண்டு அழிக்கப்பட்டபோது, கனடிய நாடாளுமன்றம் முன்பாக 30,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் போராடினார்கள். ரொறோன்டேவில் 80,000க்கும் அதிகமான மக்கள் போராட்டம் நடாத்தினார்கள்.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மிகமுக்கியமான பெரும் வீதியை முற்றுகையிட்டு தாங்க முடியாத துயரத்தை வெளிப்படுத்திளார்கள். அன்று நாமும் எம்மில் நம்பிக்கை வைத்திருந்த தாயக உறவுகளும் தோற்றுப்போனோம்.
இம்மாநாட்டின் இரு நாட்களும் ஐந்து அரங்குகளில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும். பௌத்த சிங்கள இனவெறியும் அதன் விளைவுகளும், மனித உரிமை மீறல்கள் நீதிக்கான தேவை, இலங்கையின் தமிழின அழிப்பு, ஈழ தமிழர் தேச மீள்கட்டுமானம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் எனும் தலைப்புகளில் ஆய்வு, அறிவு சார் கருத்தரங்கு மற்றும் ஆவணப்படுத்தல் போன்றவை இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 5ம், 6ம் திகதிகளில் ஓட்டாவாவிலுள்ள கார்ல்ரன் பல்கலைக்கழகத்தில் சுய நிர்ணய அடிப்படையில் தாயகம், இனப்படுகொலை, சர்வதேச விசாரணை, மீள்கட்டுமானம் போன்ற தலைப்புகளில் உலகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு மன்றங்களில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்தவர்கள், ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் உணர்வுபூர்வமாக செயற்பட்டவர்கள் என 30க்கு மேற்பட்ட புலமை மிகுந்த அறிஞர்கள் பங்கு கொள்ளும் இவ்வாய்வு மாநாட்டில் பங்காளார்களாக உங்களை செயற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.
இம் மாநாட்டின் 3ஆம் நாளான 7ம் திகதி கனடிய நாடாளுமன்றத்தில் அதிகளவு எண்ணிக்கையில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தில் இம்மாநாட்டின் தீர்மானங்களும், பிரகடனங்களும் கையளிக்கப்படவிருக்கின்றன.
இந்நிலையில், உங்களுக்கான, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு பின்வரும் இலக்கத்துடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலக்கம்: (647) 243 9396
http://www.canadamirror.com/community/01/181732?ref=ls_d_canadamirror
Geen opmerkingen:
Een reactie posten