அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம் தொடர்பில், மெல்போர்ன் நீதிமன்றம் நாளை தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளன. நடேசலிங்கம், பிரியா என்ற குறித்த இலங்கை தம்பதியினரே இவ்வாறு நாடு கடத்தல் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில், அவர்களின் நாடு கடத்தலை எதிர்த்து, ஏதிலிகள் சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில், நடேசலிங்கம், பிரியா தம்பதியினருக்கு ஆதரவாக மஷ்ட்டி நீதிமன்றத்திற்கு வெளியே மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம் நடாத்துவதற்கு தமிழ் ஏதிலிகள் கழகம் முழுமையான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.
நாளை காலை 8 மணியளவில் lagstaff Gardens (Flagstaff station Melbourne) என்ற இடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைத்து தமிழ்மக்களும் கலந்துகொண்டு குறித்த இந்தக்குடும்பத்தினருக்கு ஆதரவாக குரலெழுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/australia/01/181486?ref=recommended1
Geen opmerkingen:
Een reactie posten